Paneer Pakoda : ஸ்பெஷல் தின்பண்டம் - மொறுமொறு பன்னீர் எள் பக்கோடா

குளிர்காலத்தில் ருசியான மாலை நேர தின்பண்டத்திற்கு தேடலா ? அப்போ பன்னீர் எள் பக்கோடா செஞ்சு சாப்பிடுங்க.

Main pk

குளிர்காலத்தில் சூடான உணவுகளை வாங்கி சாப்பிட நாம் அதிக ஆர்வம் காட்டுவோம். வழக்கமான பஜ்ஜி, போண்டா, சமோசா ஆகியவற்றுக்கு பதிலாக பன்னீர் எள் பக்கோடா ருசித்துப் பாருங்கள். இதன் மொறுமொறுப்பு நாக்கில் அறுசுவைகளை நடனமாட வைக்கும்.

 pk

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம் பன்னீர்
  2. வெங்காயம்
  3. உருழைக்கிழங்கு
  4. அரிசி மாவு
  5. கடலை மாவு
  6. வெள்ளை எள்
  7. காஷ்மீரி மிளகாய் தூள்
  8. பச்சை மிளகாய்
  9. இஞ்சி-பூண்டு விழுது
  10. கொத்தமல்லி
  11. ஆப்ப சோடா
  12. உப்பு
  13. தண்ணீர்
 pk

பன்னீர் எள் பக்கோடா செய்முறை

  • முதலாவதாக ஒரு பெரிய பாத்திரத்தில் 150 கிராம் அளவிலான இரண்டு நறுக்கிய வெங்காயங்களை போட்டு நன்கு பிசையவும்
  • அதில் 250 கிராம் அளவு பன்னீரை முடிந்தவரை நன்கு நசுக்கி போடவும்.
  • அதன் பிறகு இரண்டு வேக வைத்த மீடியம் சைஸ் உருழைக்கிழங்கு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக மிக்ஸ் செய்யவும்
  • தற்போது ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, மூன்று ஸ்பூன் வெள்ளை எள், ஒரு ஸ்பூன் மிளகு தூள், ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்க்கவும்
  • அடுத்ததாக தேவையான காரத்திற்கு ஏற்ப நான்கு அல்லது இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய்களை சேர்க்கவும்
  • தொடர்ந்து ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, தேவையான அளவு கொத்தமல்லி, கால் ஸ்பூன் பேக்கிங் பவுடர் அல்லது ஆப்ப சோடா, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  • அனைத்து பொருட்களும் நன்றாக மிக்ஸாகும் வரை தண்ணீர் சேர்க்க வேண்டாம்
  • நன்கு மிக்ஸாகி உதிரும்போது உருண்டை பிடிப்பதற்கு வாட்டமாகத் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்
  • இறுதியில் மீண்டும் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து பிரட்டவும்
  • பெரும்பாலும் முடிந்துவிட்டது. தற்போது ஒரு கடாயில் கடலெண்ணெய் ஊற்றி அது சூடாகவும் வரை காத்திருந்தங்கள்.
  • கடலெண்ணெய் சூடான பிறகு தீயின் வேகத்தை சற்று குறைத்து மாவை உருண்டை கட்டி கடாயில் போடவும்

இரண்டு நிமிடங்களுக்குப் பொறிந்த பிறகு சூடான சுவையான பன்னீர் பக்கோடா தயார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP