உலகில் வாழும் அனைத்து மக்களாளும் விரும்பி சாப்பிடக் கூடிய இத்தாலி உணவு வகைகளில் பீட்சாவை பிரதானமாகக் குறிப்பிடலாம். பீட்சா மீதான மோகம் அதனை வீட்டிலேயே செய்து பார்க்க மக்களை முயற்சிக்க வைத்திருக்கிறது. முதல் முயற்சியில் பலரும் சொதப்பி இருக்கலாம், ஆனால் நாங்கள் பட்டியலிட்டுள்ள செய்முறை ருசியான பீட்சாவை சுவைக்க உதவும்.
பீட்சா செய்வது எப்படி ?
பீட்சா செய்முறை மூன்று வகைப்படும். அவை பீட்சா பேஸ், பீட்சா சாஸ் மற்றும் பீட்சா டாப்பிங்ஸ். பீட்சாவின் ருசியை உறுதிப்படுத்துவதில் இவை மூன்றும் முக்கியமானவை.
- ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரையை போட்டு ஐந்து நிமிடங்களுக்குக் கரைய விடவும்
- அதில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்
- ஒரு கப் அளவிற்கு மாவு சேர்த்து மென்மையாக்கவும்
- தற்போது மாவை மிருதுவாக்குவதற்காக 2 முதல் 3 நிமிடங்களுக்கு நன்கு பிசையவும்
- அடுத்ததாக மாவை நெய் தடவிய பாத்திரத்தில் போட்டு தூய்மையான துணியால் மூடி, சுமார் 45 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள்
- இதற்கிடையில் பீட்சா டாப்பிங்ஸை தயார் செய்ய உங்களுக்குப் பிடித்தமான காய்கறிகளைப் பயன்படுத்துங்கள்
- காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக வைக்கவும்.
பீட்சா சாஸ் செய்வது எப்படி ?
- பீட்சா சாஸ் தயாரிக்க 4-5 தக்காளிகளை தேர்ந்தெடுத்து அதை பிளெண்டரில் போட்டுத் தக்காளி கூழ் தயாரிக்கவும்.
- தற்போது ஒரு பேனில் ஒன்றரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது நன்கு சூடாகிய பிறகு இரண்டு நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
- பூண்டின் நறுமணம் வெளியாகும் வரை வதக்கி ஒரு ஸ்பூன் சில்லி ஃபிளேக்ஸ் சேர்க்கவும்
- இதில் தக்காளி கூழை ஊற்றி கால் ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
- பேனை மூடி தக்காளி கூழ் கெட்டியாகும் வரை சிறிது நேரத்திற்கு கொதிக்க விடவும்
- கெட்டியான பிறகு ஒரு ஸ்பூன் இத்தாலியன் ஹெர்ப்ஸ் மற்றும் அரை ஸ்பூன் மிளகு சேர்த்து நன்றாக கலக்கவும்

இறுதிக்கட்ட செய்முறை
- 45 நிமிடங்களுக்கு மூடி வைக்கப்பட்டிருந்த பீட்சா மாவை வெளியே எடுத்துவிடுங்கள்
- பரோட்டா மாவை அடிப்பது போல் பீட்சா மாவில் உள்ள காற்று குமிழிகள் அகலும் வரை நன்கு குத்தவும்.
- நீங்கள் செய்ய விரும்பும் பீட்சாவின் அளவைப் பொறுத்து மாவை பகுதிகளாகப் பிரிக்கவும்
- தற்போது சிறிது சோள மாவு மற்றும் எண்ணெய் துளிகள் சேர்த்து மாவை சமமாகத் தட்டவும்
- நீங்கள் விரும்பிய அளவை அடைந்தவுடன் பீட்சா பேஸில் சாஸை ஊற்றி சமமாகப் பரப்பவும்
- சீஸ் மற்றும் காய்கறிகளை மேலே தூவி பீட்சாவை ஓவனில் வைத்து 8-10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
- இறுதியாக ஓரிகனோ சேர்த்து உங்களுடைய அன்புக்குரியவரிடம் பரிமாறுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation