முருங்கை கீரை பொரியல்
பல வகையான கீரை இருந்தாலும் முருங்கை கீரையை பொரியலுக்கு தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் அதில் இரும்பு சத்து மிக அதிகமாக இருக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் தினமும் கீரை சாப்பிடுங்கள். குறிப்பாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் முருங்கை கீரை உட்கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
- முருங்கை கீரை ஒரு கட்டு
- நல்லெண்ணெய்
- முருங்கை கீரை
- இரும்பு சத்து
- ஊற வைத்த பையித்தம் பருப்பு - 2 அல்லது 3 ஸ்பூன் (1 மணி நேரம்)
- கடுகு
- பூண்டு
- பச்சை மிளகாய்
- காய்ந்த மிளகாய்
- வெங்காயம்
- பூண்டு
- தேங்காய் துருவல்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- பெருங்காயம்
முருங்கை கீரை செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு 4-5 காய்ந்த மிளகாய்களை போட்டு வறுக்கவும்
- அடுத்ததாக ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து அது நன்கு பொரிந்தவுடன் தேவையான அளவு பூண்டு சேர்க்கவும்
- பூண்டு சேர்ப்பது உங்களது விருப்பம்
- காரத்திற்காக 3 பச்சை மிளகாய் அதாவது ஒன்றை ஸ்பூன் அளவிற்கு நறுக்கிய பச்சை மிளகாய்களை சேர்க்கவும்
- அடுத்ததாக கறிவேப்பிலை சேருங்கள். இது உடலில் ரத்த சுத்திகரிப்புக்கு உதவும்
- இவற்றுடன் இரண்டு நறுக்கிய வெங்காயங்கள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- இவை அனைத்தும் பாதியாகும் வரை வதக்கிய பிறகு 30-40 கிராம் அளவிற்கு இரண்டு ஸ்பூன் ஊற வைத்த பயத்தம் பருப்பு சேர்த்திடுங்கள்
- அடுத்ததாக தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய் தூள், கால் ஸ்பூன் பெருங்காயம் சேர்க்கவும்
- தற்போது நன்கு கழுவிய ஒரு கட்டு முருங்கை கீரையை போடுங்கள்
- அனைத்தையும் நன்றாக பிரட்டி தீயை சற்று குறைத்து 9-10 நிமிடங்களுக்கு வதக்கவும்
- இறுதியாகத் தேங்காய் துருவல் சேர்த்துவிட்டால் உடலுக்கு ஆரோக்கியமான முருங்கை கீரை பொரியல் ரெடி.
கார்த்திகை தீபத்திற்கு மேலும் சுவையூட்டும் உணவான பைனாப்பிள் கேசரியின் செய்முறையைப் பார்க்கலாம்…
பைனாப்பிள் கேசரி
தேவையான பொருட்கள்
- அன்னாசி பழம்
- ரவை
- சர்க்கரை
- நெய்
- முந்திரி பருப்பு
- உலர் திராட்சை
- தண்ணீர்
- நல்லெண்ணெய்
அளவீடு
- 1 கப் அன்னாசி பழத்திற்கு 1 கப் ரவை
- 1 கப் ரவைக்கு 1.25 கப் சர்க்கரை
- அரை கப் நெய் (8 ஸ்பூன்) + நல்லெண்ணெய் (6 ஸ்பூன்) சேர்த்து ஒரு கலவை
செய்முறை
- முதலாவதாக ஒரு பேனில் 3 ஸ்பூன் அளவிற்கு கலந்து வைத்திருக்கும் நெய் - நல்லெண்ணெய் கலவையை சேர்க்கவும்
- அடுத்ததாக 10 முந்திரி பருப்பு, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
- நன்கு வறுத்தபிறகு இவற்றை பேனில் இருந்து வெளியே எடுத்து விடுங்கள்
- இதே கலவையில் ஒரு கப் அளவிற்கு நறுக்கிய பைனாப்பிள் சேர்த்து 4-5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்
- தற்போது 2.5 கப் தண்ணீர் சேர்த்து பைனாப்பிளை நன்கு கொதிக்க விடவும்
- இதனிடையே மற்றொரு பாத்திரத்தில் நெய் + நல்லெண்ணெய் கலவையைத் தேவையான அளவிற்கு ஊற்றி அது சூடான பிறகு ஒரு கப் ரவை சேர்த்து நன்கு வறுக்கவும்
- இந்த நிலையில் ரவையுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெய் + நல்லெண்ணெய் கலவையைச் சேர்த்து கிண்டவும்
- அடுத்ததாக 1.25 கப் சர்க்கரை சேருங்கள்
- தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரவையுடன் மீதம் இருக்கும் நெய் + நல்லெண்ணெய் கலவையைச் சேர்க்கவும்
- இறுதியாக குங்கமப்பூ சேர்த்த பிறகு மீண்டும் 5 நிமிடங்களுக்கு குறைவான தீயில் வேக வைக்கவும்
இறுதியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரி, உலர் திராட்சை, கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்து மீதம் இருக்கும் நெய் + நல்லெண்ணெய் கலவையை ஊற்றிக் கிண்டுங்கள். தீபத் திருநாளை தித்திப்பாக்கும் பைனாப்பிள் கேசரி தயார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation