சாப்பிட பிறகு வரும் ஏப்பம் உடலின் இயல்பான செயல்பாடுகளில் ஒன்று. ஒரு சிலருக்கு சாப்பிடாமல் கூட பசியில் ஏப்பம் வரும். ஆனால் உங்களுக்கு அடிக்கடி சாப்பிட்ட உடனே ஏப்பம் வருவது, சத்தமாக ஏப்பம் வந்தால் அருகில் இருப்பவர்களுக்கு கேட்கும் அளவுக்கு இருந்தால் அது தர்மசங்கட நிலையை ஏற்படுத்தும். பெரும்பாலும் இந்த ஏப்பம் வாயு அல்லது வயிற்றில் காற்று சேர்வதால் ஏற்படுகிறது. அந்த வரிசையில் ஏன் அடிக்கடி ஏப்பம் வருகிறது என்பதையும், அதைக் கட்டுப்படுத்த உதவும் வீட்டு வைத்தியம் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஏப்பம் ஏன் வருகிறது?
உணவுடன் நாம் விழுங்கும் காற்று வெளியேறும் போது ஏப்பம் உருவாகிறது. இது சாதாரணமான நிகழ்வு தான். ஆனால் இது அதிகமாக அடிக்கடி ஏற்பட்டால், உடலில் ஏதோ சீரற்ற நிலை இருப்பதைக் குறிக்கலாம்.
ஏப்பம் வரக் காரணம் என்ன?
- வேகமாக உணவு அல்லது தண்ணீர் உட்கொள்வது
- பொருத்தமற்ற பல் புரோதீசுகள் (Dentures) பயன்படுத்துதல்
- சோடா போன்ற கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் அதிகம் குடிப்பது
- உணவுக்குப் பிறகு உடனே படுத்துவிடுதல்
- ஸ்ட்ரா மூலம் குளிர்பானங்களை உறிஞ்சிக் குடித்தல்
- பாக்கு அல்லது சூயிங்கம் போன்றவற்றை அதிகம் மெல்லுதல்
ஏப்பத்துடன் தொடர்புடைய சில உடல்நலப் பிரச்சனைகள்:
ஏரோபேஜியா (Aerophagia - அதிக காற்றை விழுங்குதல்):
இது ஒரு வகை நரம்பியல் கோளாறு. இதனால் சாப்பிடும் போது அடிக்கடி காற்றை விழுங்குகிறார், இதனால் ஏப்பம் அதிகமாக வருகிறது.
நெஞ்செரிச்சல் (Gastroesophageal Reflux Disease):
இந்த உடல் நல பிரச்சனையில் வயிற்று அமிலம் உணவுக்குழாயை அடைகிறது. இதன் விளைவாக புளிப்பு ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
அமிலத்தன்மை:
தவறான நேரத்தில் உணவு சாப்பிடுவது, அதிக மசாலா உணவுகள் சாப்பிடுவது மற்றும் இரவு நேரத்தில் அதிகம் சாப்பிடுதல் இந்த அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் கூட உங்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரலாம்.
ஹார்மோன் பிரச்சனை:
தைராய்டு பிரச்சினைகள், PCOS (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) மற்றும் இன்சுலின் ஏற்றத்தாழ்வுகள் போன்ற நிலைமைகள் இருந்தால் உங்களுக்கு சாப்பிட உடனே அடிக்கடி ஏப்பம் வரும்.
மேலும் படிக்க: உடல் எடையை செக் பண்ண சரியான நேரம் எது? மறந்தும்கூட இந்த விஷயங்களை செய்யாதீங்க
ஏப்பத்தைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்:
உணவுப் பழக்கங்களை மாற்றுங்கள்:
உணவை மெதுவாகவும் நன்றாக மென்று உண்ணுங்கள், கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கவும் மற்றும் இரவு உணவை தூங்குவதற்கு 2-3 மணி முன்பே முடிக்கவும்.
அமிலத்தைக் குறைக்கும் உணவுகள்:
கீரை, இஞ்சி, சீரகம் போன்ற அமிலத்தைக் குறைக்கும் உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்து சாப்பிடுங்கள். குறிப்பாக பப்பாளி பழம் சாப்பிடலாம். ஏன் என்றால் இது செரிமானத்திற்கு உதவும்.
தண்ணீர் குடிக்கும் முறை:
எப்போதும் அண்ணாந்து தண்ணீர் குடிக்காமல், வாயில் வைத்து மெதுவாகக் குடியுங்கள். அதே போல ஒரே நேரத்தில் அதிகம் தண்ணீர் குடிக்காமல், சிறிது சிறிதாகக் குடியுங்கள்.
ஏப்பத்தை கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம்: ஏலக்காய் நீர்
செய்முறை:
- நான்கு அல்லது ஐந்து ஏலக்காயை வறுத்து, தோலை நீக்கி விதைகளை எடுத்துக் கொள்ளவும்
- 15-20 விதைகளை பொடித்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்
- பிறகு இதை தேன் அல்லது நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து குடிக்கவும்
- இந்த ஏலக்காய் நீரை காலை மற்றும் இரவு உணவுக்கு முன் குடித்து வரலாம்.
- ஏப்பத்தை கட்டுப்படுத்தி அஜீரணம், வயிற்றுப் புண், அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் ஆகியவற்றைக் குறைக்க இது உதவும்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation