இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியமாகிறது. பெற்றோர்கள் இந்த நேரத்தில் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் மற்றும் இயற்கை உணவுகளின் உதவியுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். மதர்ஹுட் மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் நியோனாட்டாலஜிஸ்ட் டாக்டர் அமித் குப்தா குழந்தைகள் நலன் பற்றி கூறியுள்ளதை பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சுவை மற்றும் சில வாசனைகளால் கர்ப்பிணிப் பெண்கள் அவதிப்படுகிறீர்களா... அதை கட்டுப்படுத்த சில வழிகள்
குழந்தைகளின் நலனுக்கான சூப்பர் ஃபுட்களின் பட்டியல்
சிட்ரஸ் பழங்கள்
இந்த பழங்கள் நல்ல ஆற்றல் திறனுக்கு மிகவும் முக்கியம். மேலும் அவை குழந்தைகளின் உணவில் பட்டியலில் சேர்க்கப்பட வேண்ட்டியது முக்கியம். அவை வைட்டமின்-சி நிறைந்துள்ளது. சிட்ரஸ் பழங்களில் மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளதால், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கும். திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களை குழந்தைகளுக்கு ஊட்டவும். அவற்றை வெட்டி நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம், உடனடியாக சாப்பிட சிறந்தவை.
தயிர்
தயிரில் புரோபயாடிக்குகள் அதிகம் இருப்பதால் செரிமான அமைப்புக்கு நல்லது. தயிர் குழந்தைகளின் இரைப்பைக் குழாயை குணப்படுத்தவும், கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. தயிரில் சிறிது உப்பு அல்லது சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். மாலையில் உணவளிக்காமல் மதிய உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பச்சை இலைக் காய்கறிகள்
ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகளை பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடுவதில்லை. வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே போன்றவை நிறைந்த இந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். காய்கறிகளை ஸ்மூத்திஸ் போன்று செய்து கொடுக்கலாம், கீரைகளை குழந்தைகளுக்கு ஊட்ட முயற்சிக்கவும்.
உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகள்
உலர் பழங்களில் துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்-ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை சுவாச தொற்று ஏற்படாமல் தடுக்கும். குழந்தைகளின் காலை உணவுடன் உலர் பழங்களையும் சேர்த்து வைக்கவும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு
வைட்டமின்-ஏ கரோட்டினாய்டுகள் சர்க்கரை வள்ளி கிழங்கில் மிக அதிகமாக உள்ளதால் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது மற்றும் வயிற்று எரிச்சல் போன்றவற்றை குறைக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் குழந்தைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனை வேகவைத்து குழந்தைகளுக்கு சாலட்டாக கொடுக்கலாம்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் நீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. இதில் கலோரிகள் குறைவு மற்றும் தாகத்தை தணிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சிறந்தது. மாலைக்கு முன் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.
முட்டைகள்
குழந்தைகளுக்கு முட்டை வடிவில் புரோட்டீன் கொடுக்கலாம். மேலும் இதில் மினரல்ஸ் அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. வேகவைத்த முட்டைகள் குழந்தைகளுக்கு சிறந்து. முட்டையை எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக வேகவைத்த கொடுக்க முயற்சிக்கவும்.
மீன் மற்றும் இறைச்சி
இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் புரோட்டீனுடன், துத்தநாகம், இரும்பு போன்றவையும் அவற்றில் நிறைந்துள்ளன. அவற்றை வேகவைத்து சாலட்டில் கலக்கவும். இறைச்சி போன்றவற்றை நிறைய மசாலாப் பொருட்களில் சமைப்பதும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
சியா விதைகள்
சியா விதைகள் பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். அவை இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். அவற்றில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேலை செய்கின்றன. 1 டீஸ்பூன் சியா விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் எழுந்ததும் தண்ணீருடன் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
ஆளி விதைகள்
செரிமான அமைப்பைச் சரிசெய்யவும், மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படுத்தப்படலாம். இவை இரத்தக் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. அவற்றை வறுத்து உணவில் சேர்க்கலாம் அல்லது இரவில் ஊறவைத்த பிறகு காலையில் சாப்பிடலாம்.
பூசணி விதைகள்
ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை மற்றும் நார்ச்சத்தும் உள்ளதால் இதயம் மற்றும் கல்லீரல் இரண்டிற்கும் நல்லது. ஸ்மூத்திகளில் சில பூசணி விதைகளை சேர்க்கலாம் அல்லது அவற்றை ஊறவைத்து குழந்தைகளுக்கு தின்பண்டங்களாக கொடுக்கலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான சூப்பர்ஃபுட்களைக் கொடுப்பது மிகவும் முக்கியம், ஆனால் ஒரே நேரத்தில் பலவற்றைக் கொடுப்பதும் சரியானதல்ல. இவற்றில் சிலவற்றை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டாம். குழந்தையின் ஆரோக்கிய நிலையைக் கருத்தில் கொண்டு சூப்பர்ஃபுட்களைத் தேர்ந்தெடுக்கவும். பல சூப்பர்ஃபுட்கள் பல குழந்தைகளுக்கு பொருந்தாது.
இந்த பதிவும் உதவலாம்: 60 வயது வரை இளமை போகக்கூடாதா... தினமும் இந்த 2 விஷயங்களைச் செய்தால் மட்டும் போதும்!!
சன்வெஜ், சாலட்கள், வேறு எந்த உணவுப் பொருளிலும் கலந்து சுவையாக கொடுக்கலாம். இந்த ஆரோக்கியமான உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மிகவும் முக்கியம். இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால், பகிரவும். மேலும் இதுபோன்ற கதைகளைப் படிக்க ஹர்சிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation