உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களும் மங்குஸ்தான் பழங்களை விரும்பி சாப்பிடுகிறார்கள். லேசான இனிப்பும், புளிப்பு சுவையும் நிறைந்த சுவைமிக்க அற்புத பழம் இது. பல ஊட்டச்சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்த மங்குஸ்தான் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது.
ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான இந்த ஊதா நிற பழங்களை அடுத்த முறை எங்கு பார்த்தாலும் தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் புற்றுநோயின் அபாயத்தை குறைப்பது வரை மங்குஸ்தான் பழத்தில் பல அதிசய மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. அவை என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம் : எடை குறைய சருமம் பளபளக்க வேம்பு கற்றாழை ஜூஸ் குடிங்க!
மங்குஸ்தானில் நிறைந்துள்ள ஃபோலேட், வைட்டமின் C மற்றும் சாந்தோன்ஸ் போன்ற சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகின்றன.
ஆராய்ச்சிகளின் படி மங்குஸ்தான் பழங்களில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிகல்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கின்றன. இது போன்ற ஃப்ரீ ரடிகல்கள் உடலின் செல்களுக்கு பாதிப்புகளையும், புற்று நோய் போன்ற கடுமையான சில நோய்களையும் ஏற்படுத்துகின்றன. ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இதுபோன்ற செல் பாதிப்புகளை தடுக்கலாம். புற்றுநோய் மற்றும் இதயம் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மங்குஸ்தானை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மங்குஸ்தான் பழங்களில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடல் உறுப்புகள் மற்றும் உடம்பில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. ஒரு சில உடல் உறுப்புகள் அல்லது செல்களில் ஏற்படும் வீக்கத்தால் சர்க்கரை நோய், இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் புற்றுநோயும் ஏற்படலாம். இது போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவும். மங்குஸ்தானில் அதிக அளவு நார்ச்சத்துக்களும் உள்ளன. இது போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலின் அழற்சி எதிர்வினைகளை கணிசமாக குறைக்க உதவுகின்றன.
மங்குஸ்தான் பழங்களை சாப்பிடுவது புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. ஆராய்ச்சிகளின் படி, மங்குஸ்தான் பழங்களில் உள்ள சாந்தோன்கள், தாவர அடிப்படையிலான சேர்மங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலை தடுக்கின்றன. மங்குஸ்தான் பழங்களை சாப்பிட்டு வர மார்பகம், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்.
மங்குஸ்தான் பழங்களில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சீரான செரிமான செயல்முறைக்கும் உதவுகின்றன. செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால் குடல் சார்ந்த நோய்களை தடுக்கலாம். இதன் மூலம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், ஃபுட் பாய்சன் போன்ற குடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மங்குஸ்தான் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்துக்கொள்ள உதவும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மங்குஸ்தான் பழங்களை தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் உடல் பருமன் நீங்கி ஆரோக்கியம் செழித்திட மங்குஸ்தான் பழங்களை தவறாமல் உண்டு பயன் பெறுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: என்றும் இளமையுடன் வாழ, இதை மட்டும் செய்தால் போதும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]