வேம்பு கற்றாழை ஜூஸில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. இந்த கலவையானது சருமம் மற்றும் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகிறது. இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள வேம்பு கற்றாழை ஜூஸ் சருமத்திற்கு பளபளப்பை கொடுப்பதோடு மட்டுமின்றி உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. இதைக் குடித்து வர உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறும். வேம்பு கற்றாழை ஜூஸ் செய்முறை மற்றும் அதன் நன்மைகளை தெரிந்து கொள்வோம் வாருங்கள்
கற்றாழை ஜெல் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. இதில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் A, B, C, E, பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இந்த சத்துக்கள் யாவும் சருமத்திற்கு தேவையான போஷாக்கை வழங்குகின்றன. கற்றாழையை நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றன மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: நாள்பட்ட மலச்சிக்கலை வேரோடு விரட்டும் மூலிகை டீ!
மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். நீங்கள் விரும்பினால் இதை வடிகட்டியும் குடிக்கலாம். இதன் கசப்பு சுவையை நீக்க தேன் சேர்த்து கொள்ளலாம். இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வர உடல் எடை குறைவதோடு மட்டுமின்றி நல்ல கலகலப்பான சிரமத்தையும் பெறலாம்.
இதில் இயற்கையான பொருட்கள் மட்டுமே சேர்த்திருப்பதால் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஆயுர்வேத நிபுணர் அல்லது மருத்துவரை ஆலோசனை செய்தபின் இதை எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]