காலை நேரத்தில் வாழைப்பழத்தை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.
மேலும் படிக்க: கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் கொய்யா இலை டீ; எப்படி தெரியுமா?
காலையில் எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது, அன்றைய தினத்தை புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் தொடங்க ஒரு சிறந்த வழி ஆகும். வெறும் வயிற்றில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதன்படி, காலையில் வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இதில் காணலாம்.
காலையில் எழுந்ததும் நம் உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை வாழைப்பழம் வழங்குகிறது. இதில் உள்ள இயற்கை கார்போஹைட்ரேட்டுகளும், வைட்டமின்களான B6 மற்றும் B1-ம், நிலைத்த ஆற்றலை வழங்குகிறது. ஒரு வாழைப்பழம் சாப்பிடும்போது, அது உங்கள் உடலின் பேட்டரியை சார்ஜ் செய்வது போல, உங்கள் காலை பொழுதின் உற்சாகத்தை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, சர்க்கரையின் உறிஞ்சுதலை தாமதப்படுத்துவதால், சோர்வு இல்லாமல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
ஒரு வாழைப்பழத்தில் சுமார் 3 முதல் 5 கிராம் வரை நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து, உங்கள் செரிமான மண்டலத்தை சீராக இயங்கச் செய்து, மலச்சிக்கல் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, காயாக உள்ள வாழைப்பழத்தில் உள்ள ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் (Resistant Starch), குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு உணவாகி, ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் தான் வாழைப்பழம் சாப்பிடுவது குடலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பானங்கள்
வாழைப்பழத்தில் சுமார் 380 - 420 மி.கி வரை பொட்டாசியம் உள்ளது. இந்த பொட்டாசியம், உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றி, இரத்த குழாய்களை சீராக்குகிறது. இதனால் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகிறது. இது உங்கள் இதயத்திற்கும், தசைகளுக்கும் ஒரு புத்துணர்ச்சியை அளிப்பதை போல செயல்படுகிறது. எனவே, தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் பெரிதும் உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின் B6 மற்றும் ட்ரிப்டோஃபான் (Tryptophan), செரோடோனின் மற்றும் டோபமைன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இவை மனநிலையை மேம்படுத்தி, மனச்சோர்வு, மனக்கவலை அறிகுறிகளை போக்க உதவுகின்றன. தேவையில்லாத சர்க்கரை நிறைந்த உணவுகளை போல இல்லாமல், வாழைப்பழங்கள் உங்கள் மனநிலையை நிலையாகவும், ஆரோக்கியமான முறையிலும் மேம்படுத்துகின்றன.
ஆகவே, உங்கள் காலை பொழுதை ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும், மகிழ்ச்சியாகவும் தொடங்க ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவது நன்மை அளிக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]