கொய்யா இலைகள் சாப்பிடுவதால் பல் வலிக்கு நிவாரணமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கொய்யாவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
மனிதர்களின் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று கண்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்குக் கண்களின் ஆரோக்கியத்தைப் பற்றி சற்றும் கவலைக் கொள்வதில்லை. 24 மணி நேரமும் மொபைல் பயன்பாடு, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு கண்களின் பார்வைத் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருக்கிறோம்.
எப்போது கண்களில் எரிச்சல் மற்றும் வலிகள் அதிகமாகிறதோ? அப்போது தான் கண்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகளவில் எழக்கூடும். கண் பரிசோதனைகள் மேற்கொண்டாலும் உணவுப் பழக்க வழக்கத்திலும் கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம். இந்த வரிசையில் இன்றைக்கு கண்களின் பார்வைத் தன்மையை மேம்படுத்த எப்படியெல்லாம் கொய்யா இலைகள் பயன்படுகிறது என்பது குறித்து விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: என்றென்றைக்கும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 10 வைத்தியங்கள்
கொய்யா இலைகளை அப்படியே சாப்பிடுவது என்பது பலருக்கும் பிடிக்காது. இந்நிலையில் அதை வைத்து டீ செய்து பருகலாம். இவை உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு கண்களின் பார்வைத் திறனை அதிகரிக்க உதவியாக இருக்கும்.
கண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. கொய்யா இலைகளிலும் வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் கண்களின் பார்வைத்திறனைப் பாதுகாக்கிறது.
மேலும் படிக்க: தொடர்ந்து 15 நாள் இஞ்சி தண்ணீர் குடிப்பதால் இந்த 8 பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்தலாம்
கொய்யா இலைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகளவில் உள்ளன. இவை கண்களின் செல்கள் மற்றுத் திசுக்களைப் சேதப்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் கொய்யா இலை தேநீர் கண் பார்வையை மேம்படுத்தவும், வயது தொடர்பான பார்வைக் குறைபாட்டைத் தடுக்கவும் உதவக்கூடும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]