காலைப் பொழுதை வைத்தே அன்றைய நாள் அமைகிறது. இந்நிலையில் ஆரோக்கியமான காலை வழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் உங்கள் உற்பத்தி திறன் மற்றும் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு மட்டுமின்றி மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம்.
பெரும்பாலான பெண்களின் காலைப்பொழுது குழந்தையை பராமரிப்பது முதல் காலை உணவை தயார் செய்து வரை பொறுப்புகளுடனே தொடங்குகிறது. வீட்டை சுத்தம் செய்வது, அலுவலகம் செல்வது அல்லது வீட்டில் உள்ள மற்ற வேலைகளை பார்ப்பது என தொடர்கிறது இந்த வேலை பட்டியல்.
இந்த பதிவும் உதவலாம்: தயிருக்கு உறை ஊற்றும் போது உலர் திராட்சையை சேர்ப்பதில் இவ்வளவு நன்மைகளா!
உங்களுடைய பொறுப்புகளை கையாள மனதளவில் தயாராக இருந்தாலும் உடலும் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா? எனவே உங்களுடைய காலை பொழுதை, உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கக்கூடிய ஒரு விஷயத்துடன் தொடங்கலாம். உங்கள் காலை நேர வேலைகளை கையாளவும், உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் இது உதவியாக இருக்கும். சில உலர் பழங்கள் மற்றும் விதைகளை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இப்பதிவில் பார்க்க போகிறோம். இது குறித்த தகவல்களை உணவியல் நிபுணரான ஷ்யாமின் மல்ஹோத்ரா ஜி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாதாம் மற்றும் அக்ரூட்டில் வைட்டமின E மற்றும் ஒமேகா 3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவ்விரண்டும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்களின் நல்ல ஆதாரம் ஆகும். இவை இளமையில் ஏற்படும் வயது முதிர்வை தடுக்கின்றன. உடல் எடையை குறைக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.
கருப்பு திராட்சைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவை இயற்கையாகவே இனிப்பாக இருந்தாலும் மிக குறைந்த அளவு கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளன. இவை இரத்த சோகையை சரி செய்ய உதவுகின்றன.
இவை வைட்டமின்களின் சிறந்த ஆதாரம் ஆகும். இக்கலவையில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E, வைட்டமின் K, வைட்டமின் B6, தியாமின், நியாசின் ரிபோஃப்ளேவின் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இவை இதய தசைகளை வலுப்படுத்த உதவும் ஆற்றலை அதிகரிக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: கோடையில் வயிற்று கொழுப்பை குறைக்க உதவும் அற்புத பானம்
இவற்றை ஊற வைக்க சாதாரண நீரை பயன்படுத்தவும். மேலும் ஊற வைப்பதற்கு கண்ணாடி அல்லது டீ, காபி கோப்பைகளை பயன்படுத்தலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]