herzindagi
curd raisins benefits for gut

தயிருக்கு உறை ஊற்றும் போது உலர் திராட்சையை சேர்ப்பதில் இவ்வளவு நன்மைகளா!

நன்மைகள் நிறைந்த உலர் திராட்சையையும் தயிரையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? இதற்கான விடையை நிபுணரிடமிருந்து கேட்டறிவோம்…
Expert
Updated:- 2023-04-08, 09:15 IST

ஆரோக்கியமான சிற்றுண்டியின் பட்டியலில் நிச்சயமாக நட்ஸ் வகைகளும் இடம்பெறும். ஒரு சிலர் பாதாம், அக்ரூட், உலர் திராட்சை போன்ற நட்ஸ் வகைகளை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஊறவைத்து சாப்பிடும் பொழுது ஏராளமான நன்மைகளையும் பெற முடியும். ஆனால் இயல்புக்கு மாறாக தண்ணீருக்கு பதிலாக தயிருடன் சேர்த்து உலர் திராட்சையை சாப்பிட வேண்டும் என நிபுணர் பரிந்துரை செய்கிறார். இது பற்றிய தகவல்களை விரிவாக இப்பதிகள் பார்க்கலாம்.

திராட்சையை தயிருடன் சேர்த்து எப்படி சாப்பிட வேண்டும்? இக்கலவையை சாப்பிடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை பிரபல ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் ருஜுதா திவேகர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் செய்முறை மற்றும் சாப்பிடுவதற்கான சரியான நேரம் குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயுர்வேத குறிப்புகள்

திராட்சை மற்றும் தயிர் சாப்பிடும் முறை

benefits of curd raisin

  • முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான பாலை எடுத்துக் கொள்ளவும். முழு கொழுப்புள்ள பால் பயன்படுத்தினால் நல்ல கெட்டியான தயிர் கிடைக்கும்.
  • இப்போது பாலுடன் 4- 5 உலர் திராட்சையை சேர்க்கவும். கருப்பு உலர் திராட்சையை பயன்படுத்துவது சிறந்தது.
  • இதனுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்க்கவும்.
  • ஒரு முறை நன்கு கலக்கிய பிறகு, பாத்திரத்தை மூடி 6-8 மணி நேரம் வரை தயிர் உறைவதற்கான நேரத்தை கொடுக்கவும்.
  • நீங்கள் காலையில் உறை ஊற்றி வைத்தால் மதிய வேளையில் சாப்பிட தயாராக இருக்கும்.
  • இதை உங்கள் மதிய உணவுடன் அல்லது மதியம் 3-4 மணியளவில் மதிய உணவிற்குப் பிறகு இடைப்பட்ட உணவாக சாப்பிடலாம்.

உலர் திராட்சை மற்றும் தயிர் கலவையின் நன்மைகள்

benefits of raisin with curd

இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? இதன் நன்மைகள் பற்றி நிபுணர் பகிர்ந்துள்ள கருத்துக்களை இப்போது பார்க்கலாம்.

தயிர் ஒரு புரோபயாடிக் ஆக செயல்படுகிறது. மேலும் திராட்சையில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆகையால் இக்கலவை ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படும். இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் பின்வரும் நன்மைகளை பெறலாம்

  • கெட்ட பாக்டீரியாவை அழிக்கும்.
  • நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
  • உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
  • இவை எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கும் நன்மை பயக்கின்றன.
  • இதை சாப்பிட்டு வந்தால் குடல் அழற்சியையும் குறைக்கலாம்.
  • உடலில் உள்ள கொழுப்புகளின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் தயிர் உதவுகிறது. இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கலில் இருந்தும் விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் அதிக உடல் எடையுடன் இருப்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]