Over Weight : பெண்கள் அதிக உடல் எடையுடன் இருப்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்?

"நான் குண்டாக இருக்கிறேனா?" நீங்களும் இந்தக் கேள்வியை அடிக்கடி கேட்கிறீர்கள் என்றால், இதற்கான விடையை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்…

obesity in women  over

உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்வது ஒரு வரம். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று பழமொழிக்கு இணங்க நோயில்லாத வாழ்க்கையை விட ஒரு சிறந்த பரிசு இவ்வுலகில் இருக்க முடியாது. நோய்களை சமாளிக்க மன தைரியம் இருந்தாலும், உடல் ஒத்துழைப்பின்றி வாழ்க்கை கடினமாகலாம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, சீரற்ற உணவு மற்றும் குறைந்த உடல் செயல்பாடுகளால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்களும் சர்க்கரை நோய், குடலிறக்கம், இதய நோய், மூட்டுவலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உடல் பருமன் தான். இந்நிலையை தவிர்க்க உடல் எடையை சரியான வரம்புக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். நீங்கள் அதிக உடல் எடையுடன் இருப்பதை கண்டறிவதற்கான சில முக்கிய தகவல்களை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

யாரெல்லாம் உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள் ?

தினசரி தேவையை விட கூடுதல் கலோரி உள்ள உணவுகளை சாப்பிடும் போது, உணவுக்கு ஏற்ற உடல் செயல்பாடுகள் இல்லாத நிலையில் உடல் பருமன் ஏற்படுகிறது. இந்த கலோரி ஏற்றத்தாழ்வுகள் தொடரும்பொழுது உடலில் கூடுதல் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. இந்த கொழுப்பு படிப்படியாக உடல் பருமனாக மாறுகிறது.

over weight women

இயற்கையாகவே நம் உடலில் கொழுப்பு செல்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிக்கும், ஆற்றலுக்கும் மிகவும் அத்தியாவசியமானவை. இந்த செல்கள் குழந்தை பிறந்த 12 முதல் 18 மாதங்கள் வரை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இந்த நேரத்தில் ஒரு குழந்தையின் எடை அதிகரிக்கலாம். இவை 12 முதல் 16 வயது வரை மீண்டும் சுறுசுறுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்கலாம். கர்ப்ப காலத்திலும் எடை அதிகரிப்பதற்கு இந்த கொழுப்பு செல்கள் தான் காரணம். ஆனால் மேற்கூறிய நிலைகளிலும் ஆற்றல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் நாம் உடல் பருமனுக்கு இரையாகி விடுவதில்லை. ஆனால் 40 வயதிற்கு பிறகு உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் குறையத் தொடங்குகிறது. இந்த வயதிற்கு மேல் உடல் செயல்பாடுகள் குறைந்த போதிலும் உணவு பழக்க வழக்கங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படுவதில்லை. இதுவே எடை அதிகரிப்பதற்கான காரணமாகும். பெரும்பாலான பெண்களுக்கும் அவர்கள் குண்டாக இருக்கிறார்களா என்று சந்தேகம் அடிக்கடி எழும். உங்கள் கேள்விக்கான விடையை SPPC இன் மருத்துவரான சுபோத் பட்நாகர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம்: கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயுர்வேத குறிப்புகள்

நீங்கள் அதிக எடையுடன் இருப்பதை கண்டறிவது எப்படி?

நிபுணரின் கருத்துப்படி "உங்களுடைய உடல் எடை மற்றும் உயரத்தின் அடிப்படையில் நீங்கள் சரியான உடல் எடையில் இருக்கிறீர்களா அல்லது அதிக எடையுடன் பருமனாக இருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ளலாம்".

உதாரணமாக உங்களுடைய உயரம் 5 அடி என்றால் உங்களுடைய உடல் எடை 50 கிலோ வரை இருக்கலாம். உங்களுடைய உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். இந்த வரம்பை விட்டு விலகி உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் அதை சரியான அளவுகளில் பராமரிக்க முயற்சி செய்யவும். மேலும் பெண்களின் இடுப்பு 35 அங்குலத்திற்கு மேல் இருந்தால் அது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உங்கள் உயரத்திற்கு ஏற்ற சரியான எடையை இந்த சார்ட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

weight height chart for women

உடல் பருமனை தடுப்பது எப்படி?

  • உங்கள் உணவு பழக்க வழக்கத்தில் மாற்றங்களை செய்யுங்கள் நொறுக்கு தீனிகள், இனிப்புகள், எண்ணெய், நெய், கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி, கிட்னி பீன்ஸ் உருளைக்கிழங்கு வாழைப்பழம் முட்டை, ஆட்டு இறைச்சி, சேப்பங்கிழங்கு போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.
  • நாள் முழுவதும் உங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • பச்சைக் காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், மீன் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக பழங்களை சாப்பிடுங்கள்.
  • லிப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள்.
  • சிறு தூர பயணங்களுக்கு வண்டிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக நடக்க முயற்சி செய்யலாம்.

உலக சுகாதார தினமான இன்று, இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலம் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP