herzindagi
fertility booster drink by expert dietitian

Fertility Booster Drink : சீக்கிரமே தாயாகலாம்! இயற்கையாக கருத்தரிக்க இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க

விரைவில் கர்ப்பம் தரிக்க வேண்டுமா? உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன், நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த பானத்தை முயற்சி செய்து பாருங்கள்…
Editorial
Updated:- 2023-09-15, 06:54 IST

Conceive Naturally : தாய்மை ஒரு அழகிய உணர்வு. ஒவ்வொரு முறை பிரக்னன்சி கிட்டில் இரண்டு கோடு வந்து விடாதா என்று ஏங்கிய மனங்களுக்கு புரியும், அதன் வலியும் மன வேதனையும். பல ஆயிரம் உயிரணுக்களில் ஒன்று தான் கருமுட்டையுடன் இணைந்து கருவாக வளர்கிறது. குழந்தை இல்லை என்று கவலை படாதீர்கள். வாழ்க்கைகையில் சிறந்த விஷயங்கள் யாவும் சற்று தாமதமாக தான் கிடைக்கும். நீங்கள் தாயாக போகும் நாள்  வெகு தூரம் இல்லை. சீக்கிரமே குட் நியூஸ் சொல்ல போறீங்க!

இயற்கையான முறையில் கருத்தரிக்க முதலில் உங்களை மனதளவிலும், உடலளவிலும் தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். நல்ல சத்தான ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த பானத்தையும் முயற்சி செய்யலாம். உங்களுடைய கருவுறுதல் திறனை அதிகரிக்க கூடிய ஒரு அற்புதமான பானத்தை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். இது குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான மன்ப்ரீத் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: முகம் ஜொலி ஜொலிக்க, இந்த யோகாவை செய்தால் போதும்!

விரைவில் கர்ப்பம் தரிக்க ஆரோக்கிய பானம் 

fertility booster drink expert recommendations

  • பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன் 
  • ஆளி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன் 
  • பேரிச்சம் பழம் - 3
  • பாதாம் - 5
  • தண்ணீர் - 200 மில்லி

செய்முறை

  •  பாதாம், ஆளி விதை மற்றும் பேரிச்சம் பழங்களை 3-4 மணி நேரத்திற்கு ஊறவைத்து கொள்ளவும்.
  •  முதலில் ஒரு மிக்ஸர் ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.
  • அரைத்த பொட்டுக்கடலையுடன் ஊற வைத்து பாதாம், ஆளி விதை மற்றும் பேரிச்சம் பழக்கலவையை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இந்த பானத்தை காலையில் 11 மணிக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பானம் கருத்தரிக்க எவ்வாறு உதவும்?

fertility booster drink to conceive faster

  • பொட்டுக்கடலையில் நிறைந்துள்ள போலேட் மற்றும் புரதச்சத்துக்கள் ஆரோக்கியமான குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
  • பாதாமில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கருவுறுதலை மேம்படுத்தவும், கருவுறுதலுக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் உதவுகின்றன.
  • ஆளி விதைகளில் உள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஓவுலேஷன் சுழற்சி மற்றும் கருவுறுதலை மேம்படுத்துகின்றன.
  • பேரிச்சம் பழங்களில் உள்ள கலவைகள் நல்ல செரிமானத்திற்கு உதவுகின்றன. இது இரும்புச்சத்து பற்றாக்குறையை போக்கவும் கருவுறுதல் திறனை மேம்படுத்தவும் உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: இதயத்திற்கு உகந்த பூண்டு பால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இது தான் பெஸ்ட்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]