கொலாஜன் உணவுகள் : முதுமை இயற்கையானது. வயது கூடும் பொழுது நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. வயது முதிர்வின் மாற்றங்கள் சருமத்திலும் பிரதிபலிக்கின்றன. இதனால் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் ஏற்பட தொடங்குகின்றன. வயது அதிகரிப்பதையும், இது போன்ற ஒரு சில இயற்கையான மாற்றங்களையும் நம்மால் முழுமையாக தடுக்க முடியாது.
வயது கூடுவதை தடுக்க முடியாது, ஆனால் நிச்சயமாக இதன் அறிகுறிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். மேலும் ஒரு சில உணவுகளை நம்முடைய தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வயதாகும் செயல்முறையை தாமதப்படுத்தலாம். இளமையான சருமத்தை பெற விரும்புபவர்கள் கொலாஜன் நிறைந்த உணவுகளை தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: என்றும் இளமையுடன் வாழ, இதை மட்டும் செய்தால் போதும்!
இன்றைய பதிவில் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் கொலாஜன் நிறைந்த உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பச்சை இலை காய்கறிகள் மற்றும் கீரைகளில் நிறைந்துள்ள வைட்டமின் C, சருமத்தில் உள்ள கொலாஜன் அளவுகளை அதிகரிக்கின்றன. இவை சரும வறட்சியை நீக்குவதன் மூலம் வயது முதிர்வின் அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகின்றன.
சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி வகைகளை உங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முதுமையை தாமதப்படுத்துகின்றன. இதனை உணவில் சேர்த்து வர சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை தடுக்கலாம்.
இவை சரும ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன. பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காணப்படும் வைட்டமின் E, துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகின்றன.
வைட்டமின் C கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இதற்கு வைட்டமின் C சத்துக்கள் அதிகமாக காணப்படும் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உங்களுடைய வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுடைய நாளை எலுமிச்சை தண்ணீர் அல்லது ஆரஞ்சு ஜூஸ் உடன் தொடங்கலாம். இவ்வாறு செய்வது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதுடன், சருமத்திற்கும் அதிக நன்மைகளை தருகிறது.
உங்களுடைய சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள பருப்பு, பச்சை பயிறு, கொண்டைக்கடலை போன்ற பருப்பு மற்றும் பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும். புரதம் நிறைந்த இதுபோன்ற உணவுகள் கொலாஜன் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றன. இவற்றை உணவில் சேர்த்து வர சருமத்தில் நல்ல மாற்றங்களை காணலாம்.
இந்த பதிவும் உதவலாம் : எடை குறைய சருமம் பளபளக்க வேம்பு கற்றாழை ஜூஸ் குடிங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]