இந்தியாவில் குளிர்காலம் முடிவடைந்து வசந்தகாலம் தொடங்கி இருக்கிறது. குளிர்கால நோய்களில் இருந்து விடுபட்டுவிட்டோம் என நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் வசந்தகாலத்திலும் ஒவ்வாமை, சுவாய் நோய்கள் நம்மை துரத்துகின்றன. வெப்பநிலை மாற்றம் சுவாச கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. காலநிலைக்கு ஏற்ப வைரஸ்களும் தங்களின் உருமாற்றி கொள்கின்றன. எனவே சுவாச நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது முக்கியம்.
தினசரி உணவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதன் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். வானிலை மாற்றத்தின் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஐந்து முக்கியமான உணவுகளை இந்த கட்டுரையில் பகிர்ந்துள்ளோம்.
ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற பழங்களாகும். சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் சிட்ரஸ் பழங்களில் இருக்கின்றன. காலையில் ஆரஞ்ச் ஜூஸ் குடிப்பது மற்றும் தண்ணீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடிப்பது உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கீரை, முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி போன்ற இலை காய்கறிகள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு ஊக்கம் அளிக்க உணவுமுறையில் இலை காய்கறிகளை சேர்த்து சாப்பிடுங்கள்.
மேலும் படிங்க நீண்ட ஆயுளுக்கு உட்கொள்ள வேண்டிய நார்ச்சத்து உணவுகள்
பூண்டு பல நூற்றாண்டுகளாக அதன் மருத்துவ குணங்களுக்காக உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. மேலும் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்ட அல்லிசின் போன்ற சேர்மங்களும் பூண்டில் இருக்கிறது.
யோகர்ட் ஒரு புரோபயாடிக் உணவாகும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. யோகர்ட் நோயெதிர்ப்பு செயல்பாட்டுடன் நெருக்கமாக இணைப்பை கொண்டுள்ளது. புரோபயாடிக் உணவுகள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளான ஆரோக்கியமான பாக்டீரியாக்களை பாதுகாத்து செரிமானத்திற்கு நன்மை பயக்கும். உடலில் நோய் எதிர்ப்பு அதிகரிக்கவும் யோகர்டின் முழு நன்மைகளையும் பெறவும் அதை வெறும் வயிற்றில் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடவும்.
மேலும் படிங்க எடை இழப்பு, சருமப் பளபளப்புக்கு உதவும் மஞ்சள் தண்ணீர்
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் இவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. குடல் ஆரோக்கியத்திலும் இவை பெரும் பங்கு வகிக்கின்றன.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]