உடல் ஆரோக்கியத்திற்கு நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கொழுப்பு, புரத, வைட்டமின்கள், கனிமங்கள் ஆகிய ஊட்டச்சத்துகள் தேவை. இவை அனைத்தையும் சரியான அளவில் உட்கொண்டால் நாம் நீண்ட ஆயுளுடன் இருக்கலாம். இதில் நார்ச்சத்து மீது அனைவரும் ஒரே மாதிரியான புரிதல் இருக்கிறது. உடலில் ஜீரணத்திற்காகவும், ஜீரணம் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கவும் நார்ச்சத்து உட்கொள்வதாக நினைக்கிறோம். இதை விட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.
1970களில் இதயம் தொடர்பான ஆராய்ச்சிகள் செய்த போது அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட்ட மக்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைவு என கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது பச்சை காய்கறிகள், கீரைகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதயம் சார்ந்த பிரச்சினைகள் பெரியளவில் ஏற்படவில்லை.
இந்த நன்மைகளால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.
மேலும் படிங்க எடை இழப்பு, சருமப் பளபளப்புக்கு உதவும் மஞ்சள் தண்ணீர்
நார்ச்சத்தின் பலன்கள் அனைத்தும் கிடைக்க அவற்றைதினமும் எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்திருங்கள். நார்ச்சத்து என்றாலே நம் அனைவருக்கும் வாழைப்பழம் நினைவுக்கு வரும். அதேபோல பலர் தற்போது வெள்ளை சாதத்தை குறைத்துவிட்டு கருப்பு கவுனி அரிசி அல்லது சிறுதானியங்களை சாப்பிடுவதால் அதிக நார்ச்சத்து கிடைத்துவிட்டது என நம்புகிறோம்.
ஆனால் 100 கிராம் சிறுதானியத்தில் வெள்ளை அரிசியை விட மூன்று கிராம் நார்ச்சத்து அதிகமாக கிடைக்கும். வேறு சிலவற்றில் ஐந்து கிராம் வரை கூடுதலாக நார்ச்சத்து கிடைக்கும். ஒரு வாழைப்பழத்தில் மூன்று கிராம் நார்ச்சத்து கிடைக்கும். ஒரு நாளைக்கு சராசரியாக ஆணுக்கு 35 கிராம் நார்ச்சத்தும், பெண்ணுக்கு 25 கிராம் நார்ச்சத்தும், குழந்தைக்கு அதன் எடையின் ஏற்ப நார்ச்சத்தும் தேவை.
தானியங்களை கரைக்கூடிய நார்ச்சத்தாகவும், காய்கறிகளை கரையாத நார்ச்சத்தாகவும் குறிப்பிடலாம். கரையாத நார்ச்சத்துகள் தான் உடலில் தங்கி அதிக நன்மைகளை கொடுக்கும்.
ஒரு நாளைக்கு அரை கிலோ காய்கறி மற்றும் கீரைகள் சாப்பிட வேண்டும். ஒரே வேளையில் இவ்வளவு சாப்பிட முடியாது. எனவே காலை, மதியம், இரவு என மூன்று உணவு வேளைகளிலும் சாப்பிடும் அளவை பிரித்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிங்க உடல் எடையை குறைக்க உதவும் உலர் பழங்கள்
மதியம் 150 கிராம் சாதத்திற்கு 250 கிராம் காய்கறியும், காலை மற்றும் இரவில் தலா 125 கிராம் காய்கறிகளை உட்கொண்டால் 25 கிராமிற்கும் மேல் நார்ச்சத்து கிடைக்கும். நார்ச்சத்து அதிகமாக உட்கொள்பவர்களே அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள் என்பது ஆய்வின் மூலம் உறுதிபடுத்தப்பட்ட தகவலாகும்.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தியுடன் இணைந்திருங்கள்
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]