பல நூற்றாண்டுகளாகவே மஞ்சளை நாம் உபயோகித்து வருகிறோம். பொதுவாகவே மஞ்சள் அதன் மருத்துவ குணங்களுக்காக அறியப்படுகிறது. மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகளுக்காக நாம் அதை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்கிறோம். உணவு செய்முறையில் கால் ஸ்பூன் அல்லது அல்லது அரை ஸ்பூன் மஞ்சள் சேர்ப்பதற்கு பதிலாக அதைத் தண்ணீரில் கலந்து குடிப்பது மிகவும் எளிய வழியாகும். மஞ்சள் தண்ணீர் உங்கள் உடலில் உள்ள அனைத்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளையும் வெளியேற்றுகிறது.
சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று மற்றும் சுற்றுச்சூழலில் இருந்து தினமும் பல்வேறு நச்சு இரசாயனங்களுடன் நமது உடலுக்குள் சென்று விடுகின்றன. இவை நம்மை நோய்வாய்ப்படுத்தும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் எந்தவொரு உடல்நலப் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கவும் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற வேண்டும்.
இதை செய்வதற்கு இயற்கையான வழியைத் தேடினால் ? மஞ்சள் தண்ணீர் குடிப்பது இரு இயற்கையான தீர்வாகும். மஞ்சள் தண்ணீர் நம் உடலை சுத்தப்படுத்த எளிதான வழியாகும்.
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு
மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவையும், நீரிழிவு நோயுடன் தொடர்புடைய பிற பிரச்சினைகளையும் குறைக்கும். இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் உதவும்.
உடல் உபாதைகள் தடுப்பு
காலையில் மஞ்சள் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும். மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு குணங்கள் காரணமாக பருவகால நோய்களுக்கான சிகிச்சையில் பயன் தரும்.
மேலும் படிங்கஉடல் எடையை குறைக்க உதவும் உலர் பழங்கள்
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு
மஞ்சளில் உள்ள குர்குமின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது. இது அனைத்து உடல்நலப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. மஞ்சளில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஜலதோஷம், இருமல் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்வாக அமைகிறது. மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன
மூட்டு வலிக்கு தீர்வு
பெண்கள் பலரும் கால்சியம் சத்து குறைபாட்டால் அடிக்கடி மூட்டி வலிக்கு ஆளாகின்றனர். நடப்பதற்கும் சிரமப்படுகின்றனர். எனவே பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் மூட்டு வலி வராமல் தடுக்கலாம். மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியை தடுக்க உதவும்.
உடல் ஆரோக்கியம்
மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உயிரணு சேதத்தை எதிர்த்துப் போராடும். இவை உடலில் உள்ள திசுக்களை தேய்மானத்தில் இருந்து காப்பாற்றும். மஞ்சளை தண்ணீரில் கலந்து குடித்தாலும், பாலில் சேர்த்து குடித்தாலும், உணவில் கொஞ்சம் உபயோகப்படுத்தி உட்கொண்டாலும் அது உடலில் செல் சேதத்தை தடுக்கலாம்.
சரும மேம்பாடு
மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு சிறந்த பலன்களை தருகின்றன. மஞ்சள் தண்ணீரைக் குடிப்பது உங்கள் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
மேலும் படிங்ககாலையில் சுடு தண்ணீர் குடித்தால் நடக்கும் நன்மைகள்
உடல் எடை இழப்பு
உடல்எடையைக் குறைக்க விரும்பினால் அதற்கு செரிமான அமைப்பை சீராக வைத்திருப்பது அவசியம். மஞ்சளை உணவில் சேர்ப்பதால் செரிமானம் மேம்படும். இதனால் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து உடல் எடையைக் குறைக்கலாம்.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation