காலத்திற்கு ஏற்ப நாம் மாறிவிட்டதால் நமது வாழ்க்கை முறையும் மாறி உடல் செயல்பாடுகள் குறைந்து உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலரும் உடல் எடையை குறைப்பதற்கும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உடற்பயிற்சி செய்கின்றனர். உடல் எடையைக் குறைக்க நாம் பெரிதும் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை.
உலர் பழங்கள் போன்ற சூப்பர் ஃபுட் சாப்பிட்டு உடல் பருமனை குறைக்கலாம். இவற்றை சாப்பிடுவதால் நமது உடலில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் சேர்வதை தடுக்கலாம். உடல் பருமனை குறைக்க உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் இருப்பதால் பிஸ்தா பருப்பு அதிக சத்தானது. பிஸ்தாவில் குறைவான கலோரி மற்றும் அதிக புரதம் உள்ளது. இவை அத்தியாவசிய அமினோ அமிலங்களின் நல்ல மூலமாகும். பிஸ்தா பருப்பு சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.
முந்திரியில் சர்க்கரை குறைவாக உள்ளது மற்றும் நார்ச்சத்து, இதய ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாவர புரதம் நிறைந்துள்ளது. முந்திரி பருப்புகள் மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸின் நல்ல ஆதாரமாகவும் இருக்கின்றன. இவை மூளை ஆரோக்கியம், நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களாகும். முந்திரி பருப்பில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் பசியைக் குறைக்கவும், நிறைவான உணர்வை அதிகரிக்கவும் உதவும்.
பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ, புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது உள்ளிட்ட ஆரோக்கிய நன்மைகள் பாதாமில் இருக்கின்றன. பாதாமில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கும். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பாதாம் சாப்பிடுவது உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்க வழிவகுக்கும். இதனால் இதய நோய் அபாயம் குறையும். பாதாமில் கலோரிகள் அதிகம் என்றாலும் அவற்றைச் சாப்பிடுவது எடை அதிகரிப்பை ஊக்குவிக்காது.
மேலும் படிங்க காலையில் சுடு தண்ணீர் குடித்தால் நடக்கும் நன்மைகள்
அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை மேலாண்மைக்கு பேரிச்சம் பழங்கள் சிறந்த தேர்வாகும். பேரிச்சம்பழத்தில் வைட்டமின் B5 உள்ளது. இது உங்கள் எடை மேலாண்மை இலக்குகளுக்கு தூண்டுதலாக அமைகிறது.
உலர் திராட்சை எனும் கிஸ்மிஸ் எடை நிர்வாகத்தை ஊக்குவிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உலர் திராட்சையை ஊற வைத்துச் சாப்பிடும் போது அதன் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கிறது. இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கவும் உதவுகின்றன. உலர் திராட்சைகளில் அயோடின், நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதம் அதிகமாகவும் உள்ளன. இதனால் அவை எடை மேலாண்மைக்கான சரியான தேர்வாக அமைகின்றன.
மேலும் படிங்க வெறும் வயிற்றில் பிரிஞ்சி இலை தண்ணீர் குடித்தால் நடக்கும் அதிசயம்!
வால்நட்ஸ் உங்கள் உடலில் எல்டிஎல் (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகும். வால்நட்ஸ் கலோரிகள் நிறைந்ததாக இருந்தாலும் அவை உங்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]