குளிர்காலத்தில் உடலை கதகதப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. ஆயுர்வேத கூற்றுபடி ஒரு சிறிய துண்டு மஞ்சள் மற்றும் வெல்லத்தை சாப்பிட்டு அன்றைய தினத்தை தொடங்குவது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும், வீக்கம் இருந்தால் அதை குறைத்திடுவதோடு ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு உதவுகிறது. குளிர்காலத்தில் காலை உணவு சாப்பிடும் போது ஏன் மஞ்சள், வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும் என சில காரணங்கள்
குர்குமின் இருப்பதால் மஞ்சள் அதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக அறியப்படுகிறது. நாள்பட்ட அழற்சியானது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாகும். மஞ்சளானது வீக்கத்தை குறைக்கவும் உதவிடுகிறது. வெல்லமும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இவை இரண்டு இணைந்து சிறந்த சிகிச்சையை அளித்திடும்.
மஞ்சள் மற்றும் வெல்லம் இரண்டும் சேர்ந்து செரிமான நொதிகளின் உற்பத்தியைக் தூண்டுகிறது. இது செரிமானத்தின் செயல்முறையை மேம்படுத்தும். குடல் இயக்கம் மற்றும் மலச்சிக்கலை வெல்லம் தீர்த்திடும் என நம்பப்படுகிறது. மஞ்சள் மற்றும் வெல்லம் இரண்டுமே செரிமான ஆரோக்கியத்தை ஆதரித்திடும் அதே நேரம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
மேலும் படிங்க Carrot Nutrition : கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் !
கல்லீரலின் செயல்பாட்டை ஆதரிக்கும் நச்சு நீக்கும் பண்புகளை மஞ்சள் கொண்டுள்ளது. நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் உடலை சுத்தப்படுத்தவும் வெல்லம் உதவுகிறது. மஞ்சள் மற்றும் வெல்லத்தின் கலவை உடலில் இயற்கையாகவே நச்சுத்தன்மை செயல்முறைகளை மேம்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
மஞ்சள் அதன் நோய் எதிர்ப்பு திறனுக்காக அறியப்படுகிறது. அதாவது மஞ்சள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்தவும் ஆதரிக்கவும் உதவுகிறது. பல்வேறு தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் மூலமாக இருக்கும் வெல்லம் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது. மஞ்சள் மற்றும் வெல்லத்தை ஒன்றாக உட்கொள்வது உடலின் பாதுகாப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]