பச்சை பட்டாணி என்பது பீன் குடும்பம் என்றழைக்கப்படும் தாவர குடும்பமான ஃபேபேசியின் ஒரு பகுதியாகும். முன்னொரு காலத்தில் துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது பச்சை பட்டாணி உலகமெங்கும் வளர்க்கப்படுகிறது.
பட்டாணியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துகள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தொடங்கி புற்றுநோய்களில் இருந்து உங்களை பாதுகாப்பது வரை பல முக்கியமான மற்றும் எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது.
பட்டாணியில் கரோட்டினாய்டு லுடீன் (carotenoids lutein) மற்றும் ஜியாக்சாண்டின் (zeaxanthin) உள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் கண்புரை மற்றும் வயது தொடர்பான ஒளிக்குவியச் சிதைவு போன்ற நாள்பட்ட நோய்களில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க உதவுகின்றன. பட்டாணியின் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவை தீங்கு விளைவிக்கும் நீல ஒளியிலிருந்து வடிகட்டிகளாக செயல்படுகின்றன.
பட்டாணியில் coumestrol என்ற சத்து நிறைந்துள்ளது. இது நம்மை வயிற்று புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் பட்டாணி உட்கொள்வது வயிற்று புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. பட்டாணியில் அதிகமாக உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கும் வகையில் குடல் வழியாக உணவை நகர்த்த உதவுகிறது
பட்டாணியில் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவாக்கிடும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. பட்டாணியில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, துத்தநாகம், கேட்டசின், எபிகாடெச்சின் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. பட்டாணியின் அழற்சி எதிர்ப்பு சத்துகள் நீரிழிவு, இதய நோய் மற்றும் கீல்வாதம் அபாயத்தை குறைக்கிறது.
மேலும் படிங்க Cut Down Sugar - உணவில் சர்க்கரை பயன்பாட்டை தவிர்ப்பது எப்படி?
பட்டாணியில் வீக்கத்தை குறைக்க உதவிடும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, கூமெஸ்ட்ரோல், ஃபெருலிக், காஃபிக் அமிலம், கேட்டஸின், எபிகாடெச்சின் உட்பட மேலும் சில ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.
பட்டாணியில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்திருப்பதால் ஸ்டார்ச் ஜீரணிக்கும் முறை சீராக உள்ளது. இவை மேலும் கார்போஹைட்ரேட்டுகளை முறித்து இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றன. பட்டாணி குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டு இருப்பதால் அவற்றை சாப்பிட்ட பிறகு இரத்தத்தில் சர்க்கரை திடீரென அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவே.
மேலும் படிங்க காலையில் மஞ்சள், வெல்லம் சாப்பிடுங்க! பலன்கள் பல்லாயிரம்
பட்டாணியில் காணப்படும் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஆக்சிஜனேற்றம் மற்றும் வீக்கத்தைக் குறைத்து பிளேக்குகள் (Plaque) உருவாவதைத் தடுக்கின்றன. கூடுதலாக பட்டாணியில் காணப்படும் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பிற தாதுக்கள் உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]