உணவில் சர்க்கரையை குறைப்பது எப்படி?
உணவில் இருந்து சர்க்கரையை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி நகர்ந்திட சில குறிப்புகள் இங்கே பகிரப்பட்டுள்ளன. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
இயற்கை இனிப்புகளுக்கு மாறுங்கள்
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக தேன், வெல்லம் அல்லது மேப்பிள் சிரம் போன்ற இயற்கை இனிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். இவை உங்கள் உணவுகளுக்கு தனித்துவமான சுவைகளை அளிக்கின்றன. ஏற்கனவே இயற்கையான இனிப்பு கொண்ட வெல்லம் பலரது வீட்டில் ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
மசாலா பொருட்கள் பயன்பாடு
இந்திய சமையல் அதன் நறுமண மசாலாப் பொருட்களுக்காக அறியப்படுகிறது. இயற்கையாகவே உணவுகளின் சுவையை அதிகரிக்க இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் போன்ற மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துங்கள். இவை மேலும் உணவிற்கு சுவை சேர்க்கும், அதே நேரம் சர்க்கரையின் தேவையையும் குறைக்கவும் உங்களுக்கு உதவுகிறது.
வீட்டிலேயே இனிப்பு தயாரிப்பு
வீட்டிலேயே இனிப்புகளை தயாரித்து சர்க்கரையின் பயன்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். சர்க்கரை குறைவாகத் தேவைப்படும் இனிப்புகளை தயார் செய்யுங்கள். இந்த வழியை பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கு பிடித்தமான இனிப்பை வீட்டிலேயே தயாரித்து ருசிப்பதோடு சர்க்கரை பயன்பாட்டையும் படிப்படியாகக் குறைக்கலாம்.
மேலும் படிங்ககாலையில் மஞ்சள், வெல்லம் சாப்பிடுங்க! பலன்கள் பல்லாயிரம்
சர்க்கரை பயன்பாட்டில் எச்சரிக்கை
பதப்படுத்தப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாமல் சர்க்கரை அதிகளவில் இருக்கும். அதனால் பொருட்களை வாங்கும்போது அதில் ஒட்டப்பட்டு உள்ள லேபிள்களை கவனித்து சுக்ரோஸ், குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்றவற்றின் அளவை கவனத்தில் கொள்ளுங்கள். அதன் பிறகு புதிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து சர்க்கரை பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் சமைக்கவும்.
இனிப்பு பானங்களை தவிர்க்கவும்
சோடாக்கள் மற்றும் கூல் டிரிங்க்ஸ் போன்ற சர்க்கரை நிறைந்த பானங்கள் பருகுவதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கவும். அதற்குப் பதிலாக மூலிகை தேனீர், புத்துணர்ச்சியூட்டும் சர்க்கரை இல்லாத பானம், பழச் சாறு போன்றவற்றை அருந்தவும். எளிதாக கிடைக்கும் எலுமிச்சை ஜூஸ் மற்றும் மோரில் சர்க்கரை சேர்க்காமல் பருகவும்.
மேலும் படிங்க Carrot Nutrition : கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் !
பலனளிக்கும் பழங்கள்
உங்கள் நாக்கின் இனிப்பு தேவையைப் பூர்த்தி செய்திட உணவு பழக்கத்தில் பழங்கள் அதிகம் சேர்க்கவும். பழங்களைச் சிற்றுண்டிகளாக அனுபவிக்கவும். பழ சாட் அல்லது மசாலா சேர்த்து வறுக்கப்பட்ட பழங்கள் சர்க்கரை நிறைந்த இனிப்புகளுக்கு மிகச்சரியான மாற்றாகும்.
அன்றாட வாழ்க்கையில் இந்த குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் சர்க்கரை உட்கொள்ளலை குறைத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation