இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்வதற்கு ரயில் போக்குவரத்து தேவைப்படுகிறது. நம் நாட்டில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் ரயில் போக்குவரத்து சேவை பேருந்து சேவை கட்டணத்தை குறைவாகவும். விரைவு ரயில், அதிவிரைவு ரயில், பயணிகள் ரயில் என இந்திய ரயில்வே வாரியம் ரயில் சேவையை தொடர்ந்து அளித்து வருகிறது. லட்சக்கணக்கானோர் பயன்பெறும் இந்த ரயில் சேவையில் முன்பதிவு செய்வதற்கு பல குளறுபடிகள் நீடிக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் ரயில் பயனம் மேற்கொள்வதற்கு முன்பதிவு செய்திடும் கால வரம்பு 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டது. ஏனெனில் மூன்கூட்டியே முன்பதிவு செய்துவிட்டு இறுதி நேரத்தில் பயணத்தை ரத்து செய்வதால் உரிய நபர்கள் பயணிக்க முடியவில்லை என ரயில்வே வாரியம் கண்டுபிடித்தது. இந்த நிலையில் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்
அவசர பயணம் மேற்கொள்வதற்கு சாதாரண கட்டணத்தை விட கூடுதல் தொகையை ஒரு நாளுக்கு முன்பாக தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது. அதாவது ஜூலை 2ஆம் தேதி பயணம் செய்வதற்கு ஜூலை 1ஆம் தேதி தட்கல் முன்பதிவு செய்யலாம். காலை 10 மணி அளவில் ஏசி வகுப்புகளுக்கும், 11 மணி அளவில் சாதாரண வகுப்புகளுக்கும் தட்கல் முன்பதிவு தொடங்கும். ஐஆர்சிடிசி தளத்தில் நுழைந்து கண் இமைக்கும் நேரத்தில் 120 டிக்கெட்டுகள் காலியாகி வெயிட்டிங் லிஸ்ட் காண்பிக்கும். சில நேரங்களில் பணம் எடுக்கப்பட்டு டிக்கெட் எடுக்காமல் சர்வர் கோளாறு காரணமாக டிக்கெட் கிடைக்காமல் போய்விடும். பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் ஐஆர்சிடிசி தளத்தை பயன்படுத்துவதால் இப்பிரச்னை ஏற்படுவதாக கூறப்பட்டது. மேலும் ஏஜெண்ட்களால் சாமானிய மக்களுக்கு தட்கல் டிக்கெட் கிடைக்காமல் தடுப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. தற்போது தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்கல் டிக்கெட் ஆதார் பதிவு
ஜூலை 1ஆம் தேதி முதல் ஐஆர்சிடிசி தளம் அல்லது செயலியில் தட்கல் டிக்கெட் எடுக்க ஆதார் கட்டாயமாகும். ஐஆர்சிடிசி கணக்கு வைத்திருக்கும் நபர்கள் ஆதார் எண் இணைப்பது நல்லது. அதே போல ஆதாருடன் ஓ.டி.பி எண் உறுதி செய்யும் நடைமுறை ஜூன் 15ஆம் தேதி அமலாகிறது.
ஆதார் பயன்படுத்தாமல் ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இடத்திலும், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட் வழியாகவும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய பயணம் மேற்கொள்ள விரும்பும் நபரின் செல்போனுக்கு வரும் ஓடிபியை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்கள் தட்கல் டிக்கெட்களை முதல் அரை மணி நேரத்திற்கு புக் செய்ய இயலாது. அதாவது ஏசி வகுப்பு முன்பதிவு தொடங்கும் 10 மணிக்கு பதிலாக 10.30 மணிக்கும் சாதாரண வகுப்புகளுக்கு முன்பதிவு தொடங்கும் 11 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு மட்டுமே தட்கல் டிக்கெட் எடுக்க முடியும்.
மேலும் படிங்கஇனி 120 அல்ல... 60 நாட்கள் மட்டுமே... முன்பதிவு காலத்தை தடாலடியாக குறைத்த இந்தியன் ரயில்வே
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation