இனி 120 அல்ல... 60 நாட்கள் மட்டுமே... முன்பதிவு காலத்தை தடாலடியாக குறைத்த இந்தியன் ரயில்வே

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து ரயில்வே துறை இனி ரயில் பயணங்களை மேற்கொள்வதற்கு செய்யக்கூடிய முன்பதிவு காலத்தை 120ல் இருந்து 60 நாட்களாக குறைத்துள்ளது. இதற்கான காரணத்தை விளக்கியுள்ள இந்தியன் ரயில்வே வரும் காலங்களில் முன்பதிவு செய்வோர் பயணங்களை சரிவர திட்டமிட்டு மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. 1.11.2024 முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது.
image

லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்து துறையாக இந்தியன் ரயில்வே உள்ளது. இந்த நிலையில் இந்திய ரயில்வே அமைச்சகம் இரயிலிள்களில் முன்பதிவு செய்து மேற்கொள்ளப்படும் பயணங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சொந்த ஊர் அல்லது சுற்றுலா பயணங்களுக்கு நாம் திட்டமிட்டு இருந்தால் ரயில் டிக்கெட்டை ஆன்லைனிலும், நேரடியாகவும் முன்பதிவு செய்து கொள்வோம். இன்றைய தேதியில் இருந்து அடுத்த 120 நாட்களுக்கான ரயில்களில் நாம் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி இருந்தது. இந்த வசதி தற்போது 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை இந்திய ரயில்வே அமைச்சகம் அடுக்கியுள்ளது.

60 நாட்களுக்கான முன்பதிவு வசதி

ஒரு பயணம் மேற்கொள்வதாக இருந்தால் ஏறக்குறைய 120 நாட்கள் என்பது நீண்ட காலமாக தெரிகிறது. இது சுமார் 4 மாத காலம். இதனால் பலரும் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்வது அல்லது வெயிடிங் லிஸ்ட்டில் இருந்து RAC டிக்கெட் கிடைத்தால் பயணத்தை தவிர்ப்பது அல்லது வேறு போக்குவரத்து சேவையை நாடுவது என அதிகளவில் ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது இந்த 120 நாட்கள் முன்பதிவு காலத்தில் சுமார் 21% முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்தாகின்றன. மேலும் 4-5 விழுக்காடு நபர்கள் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு பயணம் மேற்கொள்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

railway ticket

டிக்கெட் எடுத்த நபர் ரயிலில் பயணிக்கவில்லை என்றாலும் ரயில்வே துறை அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வேறு ஒருவரிடம் பணம் பெற்று அந்த சீட்டில் பயணிக்க வைத்து காசு பார்க்கின்றனர். முன்பதிவு வசதி 60 நாட்களுக்கென குறைக்கப்பட்டு இருப்பதால் மேற்கண்ட விஷயங்களை தடுக்க இயலும்.

60 நாட்கள் முன்பதிவு வசதியின் பயன்கள்

120 நாட்கள் முன்பதிவு வசதியில் பலர் டிக்கெட்டை எடுத்துவைத்துகொண்டு வேறு ஒருவர் பயணிக்கும் வாய்ப்பை தடுக்கின்றனர். இனி 60 நாட்கள் முன்பதிவு வசதியில் இந்த சிக்கல் எழாது. பொது வகுப்புகளில் பயணிக்கும் எந்த நபருக்கும் இந்த மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தாது.

இந்த அறிப்பினால் டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத்தன்மை உண்டாகி முன்பதிவு டிக்கெட் ரத்து எண்ணிக்கை குறையும் என்றும் இரயில்வே துறை கூடுதல் ஸ்பெஷல் ரயில்கள் இயக்கவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவு காலத்தை குறைப்பது அல்லது அதிகரிப்பில் மாற்றங்கள் செய்யப்படுவது முதல் முறையல்ல. 1.5.2013ல் இருந்து 31.3.2015 வரை முன்பதிவு நாட்கள் 60 மட்டுமே. தற்போது பழைய நடைமுறைக்கு செல்கிறோம். 1995 முதல் 1998 வரை 30 நாட்கள் முன்பதிவு கால நடைமுறையும் செயல்படுத்தப்பட்டது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP