அமேசான் பிரைம் வீடியோ உலக முழுவது இருக்கும் படங்கள் மற்றும் தொடர்களைப் பார்க்க சிறந்த தேர்வாக இருக்கும். எங்கு இருந்தாலும் தனக்கு பிடித்தமாகப் படங்களை மக்கள் பார்க்கலாம். குறிப்பாக வாரம் தோறும் குறிப்ப நாட்களில் வெளியாகும் படத்தைப் பார்க்க மக்கள் அதிகம் ஆர்வமாக இருப்பார்கள். இந்த வாரன் பிரைம் வீடியோவில் உலக முழுவதும் இருந்து வெளியாக இருக்கும் படங்கள் மற்றும் தொடர்கள் பற்றி பார்க்கலாம்.
தி பிக்கப் (ஆகஸ்ட் 6)
இந்த படம் ஒரு நகைச்சுவை படமாக இருக்கும் என அனைவரும் பேசுகிறார்கள். நோர்பிட் மற்றும் சாட் இருவரும் கார் ஓட்டுநர்களாக நடித்துள்ளனார். இந்த படம் பணத்தை கொள்ளையடிக்கும் படமாக எடுக்கப்பட்டுள்ளது என பேசப்படுகிறது. பிரைம் வீடியோ இந்த மாதத்தில் வெளியான படங்களில் இது மிகவும் மக்களால் கவரும் படமாக அமைந்துள்ளது. நீங்கள் இந்த படத்தை ஆங்கிலத்தில் பார்க்க விரும்பினால், இது உங்களுக்கு சிறந்த படமாக இருக்கும்.
மேலும் படிக்க: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் "ஹவுஸ் மேட்ஸ்" திரைப்படத்தின் வசூல் வேட்டை விவரம்
பட்டர்ஃபிளை (ஆகஸ்ட் 13)
2015ஆம் ஆண்டு அராஷ் அமெல் மற்றும் மார்குரைட் பென்னட் ஆகிய இருவரால் எழுதப்பட்ட கிராஃபிக் நாவலை மையமாய் வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த படம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தென் கொரியாவில் படமாக்கப்பட்ட இந்த படம் கொரியன் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க இது ஒரு சிறந்த பாடமாக இருக்கும்.
அந்தேரா (ஆகஸ்ட் 13)
ஹிந்தியில் உருவாகியுள்ள இந்த அந்தேரா தொடர் த்ரில், சஸ்பென்ஸ் அதிகமாக இருக்கும் போலீஸ் விசாரணை படம். , ஒரு அச்சமற்ற போலீஸ்காரரும், ஒரு பேய் பிடித்த மருத்துவ மாணவரும் வரவிருக்கும் அழிவைத் தவிர்க்க இந்த உயிருள்ள இருளை எதிர்கொள்ள வேண்டும்.
தலைவன் தலைவி (ஆகஸ்ட் 22)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு பின் ஓடிடியில் வெளியாகிறது. இந்த படம் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த கணவன், மனைவி இடையில் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் படமாக இருக்கிறது. சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் இப்படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கணவன், மனைவி இடையில் உருவாகும் சண்டையை வெளிப்படுத்தும் விதமாக இருந்தாலும், படம் முழுக்க நகைச்சுவையாக எடுத்திருப்பது படத்திற்கு பலமாக அமைத்திருக்கிறது. ஆகஸ்ட் 22 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் இந்தப் படம் கண்டிப்பாக மக்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும். குடும்பத்திற்குள் தம்பதியினர் எதிர்கொள்ளும் சவால்களை அழகாக நகைச்சுவையான சொல்லியிருக்கும் இந்த படம் மக்களுக்கு நல்ல விருந்தாக அமைகிறது.
மேலும் படிக்க: அமேசான் ப்ரைமில் வெளியாகும் தலைவன் தலைவி; எப்போது தெரியுமா? எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation