Bigg Boss Tamil Season 9: மீண்டும் அதே உற்சாகத்துடன் வருகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9; சோசியல் மீடியா பிரபலங்களும் பங்கேற்பு

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் தமிழ் மீண்டும் அதே உற்சாகத்துடன் விரைவில் ஒளிப்பரப்பாகும் என அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மற்ற சீசன்களைப் போன்றில்லாமல் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ல் சோசியல் மீடியாவின் வாயிலாக மிகவும் பிரபலமாகியுள்ள பிரபலங்கள் முதல் திரையுலக நடிகர்கள் பங்கேற்பதாகவும் தகவல்.  
image

தொலைக்காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற என்டர்டெய்மென்ட் நிகழ்ச்சிகளில் முக்கியமானதாக விளங்கியது பிக்பாஸ். வெளிநாடுகள் மற்றும் வட மாநிலங்களில் பிரபலமாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பு செய்து வருகிறது. மக்களின் ஆதரவோடு பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த சீசன்களில் மீடியா பிரபலங்கள் பங்கேற்றனர். இதே போன்று இந்த முறை ரீல்ஸ்கள் மூலம் அறியப்பட்ட சோசியல் மீடியா பிரபலங்கள் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யார் யார்? இதோடு வேறு என்னென்ன சிறப்பு அம்சங்கள் உள்ளது என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ன் சிறப்பம்சங்கள் :

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் சீசன் தொடங்கும். இந்நிலையில் சமீபத்தில் ஜியோஸ்டார் ன் தென்னிந்திய பொழுது போக்கு கிளஸ்டரின் தலைவர் கிருஷ்ணன் குட்டி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 குறித்து அறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ரசிகர்களின் ஆதரவதோடு கடந்த 8 சீசன்கள் வெற்றிக்கரமாக முடிவடைந்துள்ளது. இந்தாண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கவிருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.

மீண்டும் விஜய் சேதுபதி:

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த 7 சீசன்களை கமல் வழங்கி வந்த நிலையில் பிக்பாஸ் தமிழின் 8 வது சீசனை மக்கள் செல்வன் என்றழைக்கப்படும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த முறையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார்கள் என கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:பிக்பாஸ் டைட்டில் வின்னர் : மகுடம் சூடிய முத்துக்குமரன்; 2வது இடம் யார் தெரியுமா ?

கடந்த 8 சீசன்களை நெல்சன் பிரதீப் குமார் மற்றும் அமரன் திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற மிகவும் பிரபலமான இயக்குநர்கள் நிழச்சியை இயக்கி வந்தனர். ஆனால் இந்த சீசனை பிரவீன் மற்றும் அர்ஜூன் ஆகியோர் இயக்கவுள்ளார்கள். விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளர்கள் குறித்தும் நேரடியாக கருத்துக்களைப் பகிரும் வசதியையும் இந்த சீசன் 9 ல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 9 ல் யார் பங்கேற்கிறார்கள்?

பிக்பாஸ் முதல் சீசன் முதல் 8 வது சீசன் வரை திரையுலக பிரபலங்கள், தொலைக்காட்சி சீரியல் நடிகர்கள் மற்றும் பிற துறைகளில் முன்னணி வகிக்கும் பிரபலங்கள் என பல கலந்துக் கொண்டார்கள். இந்த வரிசையில் அக்டோபர் முதல் வரவிருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ல் ரீல்ஸ் மூலம் சோசியல் மீடியாவில் பிரபலமாகியுள்ள பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் யார் என்ற விபரங்கள்? இதுவரை வெளிவரவில்லையென்றால் நிச்சயம் புதிய புதிய விஷயங்கள் இடம் பெறும் என எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image credit - Instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP