தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்”. சத்தமே இல்லாமல் வந்த இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல லபத்தை பெற்றுள்ளது. ஆகஸ்ட் 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த படம் மக்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. சிறிய அளவு பட்ஜெட்டில் வெளியான இந்த திரைப்படம் எதார்த்தமான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. ஹவுஸ் மேட்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நேருக்கமான தர்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக அர்ஷா சாந்தினி என்பவர் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட், வினோதினி, தீனா ஆகியோர் நடித்துள்ளனர்.
சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷன், இந்த படத்தின் முலம் ஹீரோவா நடித்து மக்களிடம் நல்ல மதிப்பெண்ணைப் பெற்றுள்ளார். இந்த படத்தை ராஜவேல் எழுதி, இயக்கியுள்ளார் மற்றும் விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை ப்ளே ஸ்மித் நிறுவனமும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
பெற்றோரை இழந்த தர்ஷன், தான் காதலித்த பெண்ணின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்கிறார். திருமணம் செய்த பிறகு புது வீடு ஒன்று வாங்கி குடியேறுகிறார். பின் அந்த வீட்டில் நடக்கும் சில அமானுஷ்யங்கள், அவற்றால் கணவன், மனைவி அனுபவிக்கும் அசௌகரியங்கள் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தின் கதையாகும். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று 3 நாட்களில் ரூ. 1.8 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் படிக்க: ரோந்து விமர்சனம் : நேர்மையாக பணி செய்யும் காவல் அதிகாரிகளுக்கு கிடைக்கும் பரிசு
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation