ஷாகி கபிர் இயக்கத்தில் ரோஷன் மேத்யூ, திலீஷ் போத்தன் நடிப்பில் ஜூன் மாதம் வெளிவந்த படம் ரோந்து. மலையாள படமான ரோந்து ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஜூலை 22ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. லட்சுமி மேனன், கிரிஷா குரூப் இப்படத்தில் நடித்துள்ளனர். அனில் ஜான்ஸன் ரோந்து படத்திற்கு இசையமைத்துள்ளார். க்ரைம், யதார்த்த படங்களை திரையில் காட்சிப்படுத்துவதில் கேரள சேட்டன்கள் கெட்டிக்காரர்கள். ரோந்து படம் எப்படி இருக்கிறது ? வாருங்கள் பார்ப்போம். மலையாள மொழியிலேயே இப்படத்தை பாருங்கள்.
ரோந்து கதைச்சுருக்கம்
இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் இரண்டு காவல் அதிகாரிகள் சந்திக்கும் சவால்கள் என்ன ? சிறு தவறு கூட பெரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை ரோந்து படத்தில் காண்பித்துள்ளனர்.
ரோந்து விமர்சனம்
25 கால அனுபவம் கொண்ட திலீஷ் போத்தனுடன் ஆறு மாத அனுபவம் கொண்ட ரோஷன் மேத்யூ இரவு நேர ரோந்து பணிக்கு செல்கிறார். இரவு நேர கண்காணிப்பு, அசம்பாவிதங்களை தடுப்பது இருவரின் பொறுப்பு. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் எதோ ஒரு பிரச்னை வந்து கொண்டே இருக்கிறது. தற்கொலை சம்பவம் முதல் ஆள் கடத்தல் வரை ஒவ்வொரு பிரச்னையிலும் திலீஷ் போத்தன் அனுபவத்தோடு அணுகுகிறார். பயந்த சுபாவம் கொண்ட ரோஷன் மேத்யூ சிறு சிறு தவறுகளை செய்து கொண்டே இருக்கிறார். இறுதியில் பெரிய பிரச்னையில் மாட்டிக் கொள்கின்றனர். இரவுப் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் வாழ்க்கையை 2 மணி நேர படமாக எடுத்துள்ளனர்.
ரோந்து படத்தின் பாஸிட்டிவ்ஸ்
- திலீஷ் போத்தனின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. கோபம், இரக்கம், அனுபவம் கொண்டு வழக்கை அணுகுவது, குடும்ப பொறுப்பு என எல்லா காட்சிகளிலும் முத்திரை பதிக்கிறார்.
- அவசர குடுக்கை, பயந்த சுபாவம் கொண்ட காவல் அதிகாரியாக ரோஷன் மேத்யூவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
- அரக்க பறக்க கதையை நகர்த்தாமல் இரவு ரோந்தில் காவல் அதிகாரிகள் எப்படி
- பணியாற்றுவார்கள் என கச்சிதமாக காண்பித்துள்ளனர்.
- இயக்குநர் ஷாகி கபிர் இந்த கதையை எப்படி காட்சிகளாக விரிவுப்படுத்தி படம் எடுத்தார் என்பது ஆச்சரியமே.
- காவல் அதிகாரிகள் மீது பொது சமூகத்தில் நிலவும் பார்வையை இப்படம் உடைத்திருக்கிறது.
- இறுதிக்காட்சியில் ரோஷன் மேத்யூ எடுக்கும் முடிவு நம் மனதை உலுக்குகிறது.
ரோந்து படத்தின் நெகட்டிவ்ஸ்
இறுதி பத்து நிமிடங்களை சட்டென முடித்துவிட்டனர். அதை இன்னும் தெளிவாக எடுத்திருக்கலாம்.
ரோந்து ரேட்டிங் - 4 / 5
நேர்மையாக பணியாற்றினால் அதற்கு கிடைக்கும் பரிசு அநீதி. நல்ல படம் பார்த்த அனுபவத்தை ரோந்து தருகிறது. படத்தில் லட்சுமி மேனன் அடையாளம் தெரியாதது வருத்தமே.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation