குக் வித் கோமாளி "கல்யாண விருந்து" வாரத்தில் சொன்னதை செய்து காட்டிய ஷபானா

குக் வித் கோமாளியில் கல்யாண விருந்து வாரத்தில் போட்டியாளர் ஷபானா முதல் முறையாக செஃப் ஆப் தி விக் விருதை வென்று அசத்தினார். அட்வாண்டேஜ் டாஸ்க் வென்றும் ராஜு ஜெயமோகன் இறுதிவரை சமைக்க முடியாமல் திணறினார்.
image

குக் வித் கோமாளி ஆறாவது சீசனில் இந்த வாரம் டிவி தொலைக்காட்சியில் பிரபலமான புதுமண தம்பதிகளை அழைத்து விருந்து அளிக்கப்பட்டது. கடந்த வாரம் எலிமினேஷன் முடிந்த நிலையில் போட்டியாளர்களை குஷிப்படுத்த இந்த வாரம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நிகழ்ச்சி களைகட்டியது. கல்யாண விருந்து வாரத்தில் வெற்றி - வைஷ்ணவி, லோவல் தவான் - ரம்யா பாண்டியன் பங்கேற்றனர். இந்த வார சமையலில் லீடர் போர்டு இல்லையென்றாலும் செஃப் ஆப் தி வீக் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

குக் வித் கோமாளி கல்யாண விருந்து

நிகழ்ச்சியில் பிரியா ராமன் - புகழ், லட்சுமி ராமகிருஷ்ணன் - டைகர் தங்கதுரை, ராஜு - ராமர், மதுமிதா - குரேஷி, ஷபானா - சரத், உமர் - சுனிதா, விவசாயி நந்தகுமார் - சிவா மாலை அணிவித்து இணைந்தனர். விக்ரம் கமல் கெட்டப்பில் வந்த டைகர் தங்கதுரையை தேர்ந்தெடுத்த போது நிஜத்தில் நடிகர் கமலிடம் காதலை சொன்னதாக லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார். கல்யாண விருந்து வாரம் என்பதால் சங்கீத் நடனமாட வைத்து அட்வாண்டேஜ் டாஸ்க் வின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் விருந்தினர்கள் வெற்றி - வைஷ்ணவி அட்வாண்டேஜ் வின்னர்களாக ராஜு - ராமர், மதுமிதா - குரேஷியை தேர்ந்தெடுத்தனர். குரேஷி ஆவேஷம் பஹத் பாசில் கெட்டபில் வந்திருந்தார்.

செஃப் ஆப் தி வீக் ஷபானா

நிகழ்ச்சி தொடங்கும் முன்பே இந்த சீசனில் இதுவரை செஃப் ஆப் தி வீக் விருது வெல்லாத ஒரே போட்டியாளர் ஷபானா எனக் கூறிய நடுவர் தாமு அவரை நன்றாக சமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த வாரம் அட்வாண்டேஜ் வின்னராக ராஜு இருந்தாலும் அவர் செய்த உணவுகளை கோமாளி சிவா வெவ்வேறு இடங்களில் வைத்து வேலையை செய்ய விடாமல் தடுத்தார். பிரியா ராமன் கேரளா கல்யாண விருந்து, உமர் காஷ்மீரி கல்யாண விருந்து, மதுமிதா அருணாச்சல பிரதேச மலை வாழ் மக்கள் விருந்து, ராஜு ராஜஸ்தானி விருந்து, ஷபானா இலங்கை கல்யாண விருந்து உணவுகளை சமைத்தனர்.

லட்சுமி ராமகிருஷ்ணன் அறுசுவை உணவுகளை சமைத்தார். உணவுகளை நடுவர்கள் செஃப் தாமு, செஃப் கெளஷிக், மாதம்பட்டி ரங்கராஜ், லோவல் தவான் - ரம்யா பாண்டியன் ஜோடி ருசித்தனர். ஒட்டுமொத்தமாக லட்சுமி ராமகிருஷ்ணன் சமையலுக்கும், ஷபானாவின் இலங்கை கல்யாண விருந்துக்கும் பாராட்டுகள் குவிந்தன. இறுதியில் ஷபானா செஃப் ஆப் தி வீக் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக பன் பட்டர் ஜாம் படக்குழு நிகழ்ச்சியில் படத்தை ப்ரோமோட் செய்தனர். அப்போது படத்தின் நாயகன் ராஜுவுக்கு சிறப்பு முன்னோட்ட வீடியோ ஒளிபரப்பட்டது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP