நடிகை ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி அர்ஜூனன் நடிப்பில் வெளிவந்துள்ள ஓடிடி வெப் தொடர் குட் வைஃப். மேகா ராஜன், அம்ருதா ஸ்ரீனிவாசன், சம்பத் ராஜ், ஸ்நேகா மெர்லின் இந்த வெப் தொடரில் நடித்துள்ளனர். தமிழ் ஓடிடி வெளியீடுகளில் ஒரு சில வெப் தொடர்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. மொத்தம் ஆறு எபிசோடுகளுடன் வெளியாகியுள்ள குட் வைஃப் வெப் தொடர் எப்படி இருக்கிறது ? வாருங்கள் பார்ப்போம்.
குட் வைஃப் கதைச் சுருக்கம்
லஞ்ச புகாரில் நீதிபதி சம்பத் ராஜ் சிறை செல்கிறார். குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக பிரியாமணி மீண்டும் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்குகிறார். கணவனின் துரோகத்தை மீறி குடும்ப நலனுக்காக பிரியாமணி அவரை வழக்கில் இருந்து விடுவித்தாரா ? இல்லையா என்பதே குட் வைஃப்.
குட் வைஃப் விமர்சனம்
லஞ்ச புகாரில் நீதிபதி சம்பத் ராஜ் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சம்பத் ராஜின் திருமணம் கடந்த உறவு வீடியோவும் இணையத்தில் வைரலாகிறது. மனமுடைந்த பிரியாமணி குடும்பத்திற்காக ஆரி அர்ஜூனின் உதவியோடு மீண்டும் வழக்கறிஞராக பொறுப்பேற்கிறார். கணவனின் தவறுகளை பிரியாமணி மன்னித்தாரா ? இல்லையா ? வழக்கில் இருந்து சம்பத் ராஜ் வெளிவர உதவினாரா ? என்பதே குட் வைஃப்...
குட் வைஃப் பாஸிட்டிவ்ஸ்
- பிரியாமணி, ஆரி அர்ஜூனன், சம்பத் ராஜ், மேகா ராஜன் கதைக்கு தேவையான மீட்டரில் நடித்துள்ளனர்.
- பல படங்களில் நீதிமன்ற வழக்குகள், விசாரணை, வாதாடும் விதத்தை பார்த்திருப்போம். குட் வைஃப்-ல் அரசல் புரசல் இல்லாமல் நீதிமன்ற விஷயங்களை எளிமையாக காண்பித்திருக்கின்றனர்.
- வயிற்றில் வளரும் சிசுவிற்கு காப்பீடு பற்றி சிக்கலான சட்ட வழக்கை நன்றாக காட்சிப்படுத்தியிருந்தனர்.
- சம்பத் ராஜ் கொடுத்த ஏமாற்றத்தை பொறுத்து கொண்டு பிள்ளைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் நிற்கும் இடத்தில் பிரியாமணி ஜொலிக்கிறார்.
குட் வைஃப் நெகட்டிவ்ஸ்
- சம்பத் ராஜ் வழக்கின் முழு பின்னணி, பள்ளியில் சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்து என்ன நடந்தது என்பதை தெளிவாக சொல்ல தவறிவிட்டனர்.
- படங்களில் அனல் பறக்கும் விவாதங்களை பார்த்த நமக்கு குட் வைஃப் தொடரில் நீதிமன்ற வாதங்கள் ஒற்றை சார்பாக தெரிகிறது. எல்லா வழக்கிலும் பிரியாமணி ஜெயித்துவிடுகிறார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞர்களும் எளிதில் விட்டுக் கொடுக்கின்றனர்.
- இறுதிவரை குட் வைஃப்-ல் யார் வில்லன் என்றே நமக்கு தெரியவில்லை. ஆரி அர்ஜூனனாக இருக்குமோ எனத் தோன்றியது.
குட் வைஃப் ரேட்டிங் - 2.25 / 5
சுமாரான ஆறு எபிசோடுகளுடன் சீசன் ஒன்று முடிந்திருக்கிறது. விறுவிறுப்பான கதைக்களம் இல்லையென்றாலும் ஒரு முறை பார்க்கலாம் என்ற அளவில் குட் வைஃப் இருக்கிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation