மே 21,1991ல் தமிழகத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்தனர். இச்சம்பவத்தை Ninety days the true story of the hunt for rajiv gandi assassins என்ற தலைப்பில் அனிருத்யா மித்ரா புத்தகமாக எழுதி வெளியிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் The Hunt என்ற வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஜூலை 4ஆம் தேதி வெளியானது. வாருங்கள் இந்த வெப் தொடரின் விமர்சனத்தை பார்ப்போம்.
தி ஹன்ட் விமர்சனம்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய அப்போதைய பிரதமர் சந்திர சேகர் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. சென்னையில் முகாமிட்டு அக்குழு ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகள், தொடர்புடையவர்களை கண்டுபிடித்து விசாரிக்கின்றனர். குற்றவாளிகளை எவ்வாறு கண்டுபிடித்தனர் ? அதில் சந்தித்த சவால்களை ஆறு எபிஸோட் கொண்ட வெப் தொடராக எடுத்துள்ளனர்.
தி ஹன்ட் பாஸிட்டிவ்ஸ்
- ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் இந்த தொடரை பார்த்தால் எளிமையாக புரியும்.
- ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பின்னணியை ஆராயாமல் சம்பவத்தின் முதல் நாள் அடுத்த 90 நாட்களுக்கு நடந்த விஷயங்களை மட்டும் காண்பித்துள்ளனர்.
- கொலைக்கான திட்டமிடல், ஒத்திகை, இலங்கைக்கு தப்ப முயற்சி, திருப்பதியில் காணிக்கை, சயனைடு குப்பி, சிவராசனை பிடிப்பதில் நடந்த தாமதம் உட்பட பல விஷயங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
- தற்போது வெளியே உள்ள அறிவு எனும் பேரறிவாளனை கொலைக்கான வெடிகுண்டு தயாரித்த நபராக வெப் தொடரில் காண்பித்துள்ளனர்.
- ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்ற தமிழர் மறைந்த சிபிஐ அதிகாரி ரகோத்தமன். அவருடைய கதாபாத்திரத்தில் பகவதி பெருமாள் சிறப்பாக நடித்துள்ளார்.
தி ஹன்ட் ரேட்டிங் - 3.5 / 5
தங்களுக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் வெப் தொடர் எடுக்கப்பட்டுள்ளதால் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. ராஜீவ் காந்தி கொலைக்கு மூளையாக செயல்பட்ட சிவராசனை நெருங்கியும் எப்படி உயிருடன் பிடிக்க முடியாமல் கோட்டை விட்டனர் என்பதையும் காட்டியுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களில் தற்போது யாரும் சிறையில் இல்லை எனினும் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை மறுக்க முடியாது. ராஜீவ் காந்தியை கொலை செய்ததன் நோக்கத்தையும் காண்பித்து இருந்தால் தி ஹன்ட் பரபரப்பாக பேசப்பட்டு இருக்கும். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் தோற்றத்தில் நடிக்க வைக்க சரியான நபரை கூட தேர்ந்தெடுக்கவில்லை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கை பற்றிய முழு தகவல்களை அறிய ஜெயின் கமிஷன் அறிக்கையை படிக்கவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation