ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சை மாவட்ட சுற்றுலா நிர்வாகம் வந்தியத்தேவன் பாதையில் ஒரு நாள் என்ற பெயரில் பயணத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயண திட்டத்தில் சோழ தலைநகரான தஞ்சையை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தலங்களை நிபுணர்களின் வழிகாட்டுதலோடு பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீரநாயாணன் ஏரி, உடையார்குடி, கடம்பூர், திருப்புறம்பியம், நாதன்கோவில், உடையார்குடி, கடம்பூர், திருப்புறம்பியம், நாதன்கோவில், பழையாறை, உடையாளூர், தஞ்சை பெரியகோவில் என சோழ பேரரசின் முக்கிய இடங்களுக்கு பயணப்படுவீர்கள். வந்தியத்தேவன் பாதையில் ஒரு நாள் பயண விவரம், கட்டணம், பேருந்து வசதி உள்ளிட்ட தகவல்களை பார்ப்போம்.
வந்தியத்தேவன் பாதையில் ஒரு நாள்
வீரநாராயணனன் ஏரி
பயணம் தஞ்சையில் இருந்து ஆரம்பித்து முதல் இடமாக வீரநாராயணன் ஏரிக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். வீரநாராயணன் ஏரி இராஜாதித்ய சோழன் என்னும் இளவரசரால் வெட்டப்பட்டது. இராஜாதித்ய சோழன் தந்தையான முதலாம் பராந்தக சோழனின் இயற்பெயர் வீரநாராயணன் ஆகும். அப்பெயரே வீரநாராயணன் ஏரி என அழைக்கப்பட்டது.
உடையார்குடி
உடையார்குடி கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமமாகும். இங்குள்ள அனந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டுகளில் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய தரவுகள் உள்ளன. இதை உங்களுக்கு நிபுணர் குழு எடுத்துரைக்கும்.
கடம்பூர்
அடுத்ததாக ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட கடம்பூர் மாளிகை பகுதிக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். பொன்னியின் செல்வன் நாவல் படித்தவர்களுக்கு இந்த இடம் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும்.
திருப்புறம்பியம் போர்
இவ்விடம் வரலாற்றுப் போர் நிகழ்ந்த இடமாகும். பல்லவன் அபராசிதவர்மனுக்கும் பாண்டியன் இரண்டாம் வரகுணனுக்கும் இங்கு கி.பி.895ல் போர் நடந்துள்ளது. இதில் விசயாலயச் சோழனின் மகன் ஆதித்த சோழன், கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தனர்.
பழையாறை
பழையாறை என்பது சோழர்களின் இரண்டாம் தலைநகரமாகவும் இருந்தது. பொன்னியின் செல்வன் நாவலில், குந்தவை மற்றும் பிற இளவரசர்களின் இருப்பிடமாக பழையாறை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல நாதன்கோவில், உடையாளூர், தஞ்சை பெரியகோவில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.
வந்தியத்தேவன் பாதை பயண கட்டணம்
ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு இப்பயணம் நிறைவு பெறும். ஏசி வாகனத்தில் பயணத்தை மேற்கொள்வீர்கள். காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளை உணவும் பயணத்திலேயே வழங்கப்படும். ஒவ்வொரு இடத்திலும் நிபுணர்கள் குழு உங்களை வழிகாட்டும். இதற்கான கட்டணம் 2 ஆயிரம் ரூபாய் ஆகும். முன்பதிவு செய்வதற்கு https://thanjavurtourism.org-ல் விவரங்களை பதிவிடுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation