herzindagi
image

குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச் செல்ல ஆரோக்கியமான கேரட் பேன்கேக்; செய்முறை விளக்கம் இதோ

குழந்தைகளின் பள்ளி இடைவேளையில் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் கொடுக்கிறீர்கள் என்றால், ஒருமுறையாவது வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த கேரட்டுகளைக் கொண்டு கேரட் பேன் கேக் தயார் செய்யுங்கள்.
Editorial
Updated:- 2025-09-07, 14:02 IST

குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதும், விரும்பியதை வாங்கித் தருவதும் பெற்றோர்கள் கடமை தான். அதற்காக உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களை வாங்கித் தருவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக பள்ளி செல்லக்கூடிய குழந்தைகளின் உடல் நலத்தில் பெற்றோர்கள் அதீத அக்கறை காட்ட வேண்டும். அவர்களுக்குக் கொடுத்து அனுப்பும் மதிய சாப்பாடு முதல் தின்பண்டங்கள் வரை ஆரோக்கியமானதா? என்பதைப் பார்த்துக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்கும் அபாயத்திற்குக் குழந்தைகள் தள்ளப்பட்டுவிடுவார்ள். இந்த நிலையை மாற்றுவதோடு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஏதாவது ஸ்நாக்ஸ் வகைகள் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் கேரட் பேன்கேக் தயார் செய்துக் கொடுங்க. பல மணி நேரமெல்லாம் எடுக்காது. 10 அல்லது 15 நிமிடங்களில் வீட்டிலேயே எளிமையாக செய்து விட முடியும்.

மேலும் படிக்க: 10 நிமிடங்களில் சுவையான சிப்பி காளான் வறுவல் செய்யலாமா? எளிய செய்முறை இங்கே!

குழந்தைகளுக்குக் கேரட் பேன்கேக்:

  • பால் - 1 கப்
  • கேரட் - 1 கப்
  • இலவங்கப்பட்டை - சிறிதளவு
  • பேரீட்சம்பழம் - 5
  • கோதுமை மாவு - 1 கப்
  • உப்பு - சிறிதளவு
  • சர்க்கரை- தேவைப்பட்டால்

கேரட் பேன்கேக் செய்முறை:

  • பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக பேன்கேக் செய்ய வேண்டும் என்றால், முதலில் கேரட்டை கழுவி துருவி வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பவுலில் ஒரு கப் பாலை எடுத்துக் கொண்டு அதனுடன் துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  • கொஞ்சம் வாசனைக்காக இந்த கலவையுடன் இலவங்கப்பட்டை சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் பேரீச்சம்பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

 

மேலும் படிக்க: சுவையான கிரீமி காளான் சூப் சிம்பிளா இப்படி செய்யுங்க!

  • இவற்றை மிதமான சூட்டில் வைத்து நன்கு காய்ச்சிக் கொள்ளவும். கேரட்டும் தயிரும் ஒன்றாக கலந்துவிட்ட பின்னதாக அடுப்பை அணைத்துவிடவும்.
  • இதன் சூடு ஆறியதும் இலவங்கப்பட்டையை மட்டும் தனியாக எடுத்து கேரட் கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
  • இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு சேர்த்து கலந்துக் கொள்ளவும். தண்ணீர் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். தோசை மாவு ஊற்றும் பதத்திற்கு வருவதற்காக கொஞ்சமாக பால் சேர்த்து கலந்துக் கொள்வது நல்லது.
  • இறுதியாக தோசைக் கல்லை சூடாக்கி கலந்து வைத்து மாவை சிறிது சிறிதாக ஊற்றவும். இருபுறமும் வேக வைத்து எடுத்தால் போதும் சுவையான கேரட் பான் கேக் ரெடி.

 Image Credit - Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]