ஊட்டிக்கு சுற்றுலா சென்றால் நாம் மறக்காமல் கேரட் மற்றும் சாக்லேட் வாங்குவோம். இவை இரண்டும் ருசியாக இருக்கும். மாடித் தோட்டத்தில் உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், சின்ன வெங்காயம், தக்காளி வளர்ப்போருக்கு இந்த கேரட் வளர்ப்பு சிரமமாக தெரியும். கேரட் ஊட்டி மலைப்பகுதியில் மட்டுமல்ல வீட்டின் மாடித் தோட்டத்திலும் வளர்க்க முடியும். மாடித் தோட்டத்தில் பலரும் கேரட் விதைத்து குன்றிய வளர்ச்சியுடன் விளைச்சல் கிடைத்தால் அதோடு விதைப்பை நிறுத்திவிடுவர். மாடித் தோட்டத்தில் கேரட் திரட்சியாகவும் பத்து செ.மீ உயரத்திற்கு அதிகமாக வளர்ப்பது எப்படி என பார்ப்போம்.
மாடித் தோட்டத்தில் கேரட் வளர்ப்பு
கேரட் வளர்ப்பு
கேரட் வளர்த்தால் அதை கழுவி பச்சையாக கூட சாப்பிடலாம். கேரட் மூன்று மாதத்தில் விளைச்சல் காணும் காய்கறி ஆகும். அதிகபட்சமாக 100வது நாளில் மண்ணில் இருந்து கேரட் பிடுங்கிவிடலாம். இதை மஞ்சள், இஞ்சி போல கருதி வளர்க்க வேண்டும்.
கேரட் காய்கறியின் மண் கலவை
கேரட் வளர்ப்புக்கு விதை தேர்வும், மண் கலவையும் மிக முக்கியம். Nantes என்று சொல்லக்கூடிய இயற்கையான ஆரஞ்சு நிற கேரட் விதை நர்சரியில் கிடைக்கும். அதை வாங்கி பயன்படுத்துங்கள். 15 இஞ்ச் அகல மண் தொட்டியில் கேரட் வளர்க்க முடியும். இதில் தலா ஒரு பங்கு செம்மண், ஆத்து மணல், கோகோ பீட், மண் புழு உரம் எடுத்து கலக்கவும். வேப்பம் புண்ணாக்கு கிடைத்தால் அதையும் சேர்க்கலாம்.
அரை இஞ்ச் அளவிற்கு மண் வெளியே எடுத்து விதைகளை இரண்டு இஞ்ச் இடைவெளியில் நேரடி விதையில் நடவு செய்யவும். கேரட் நாற்று எடுத்து நடவு செய்யக் கூடிய காய்கறி அல்ல. மீண்டும் மண் போட்டு மூடி தண்ணீர் ஊற்றவும். விதைத்த 10 நாட்களிலேயே முளைப்பு தெரியும். முளைப்பு சரிந்திடாமல் தண்ணீர் தெளிக்கவும்.
மேலும் படிங்கவீட்டில் கொத்தமல்லி செடி செழித்து வளர்ப்பதற்கான முறை; வியாபாரமே பண்ணலாம்
கேரட் வளர்ப்புக்கான உரம்
நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை பஞ்ச கவ்யம் அல்லது மீன் அமிலம் தெளிக்கலாம். கேரட் முளைப்பு இடையே களை செடி இருந்தால் அவற்றை பிடுங்கி எரிந்து வளராமல் பார்த்துக் கொள்ளவும். மூன்று வாரத்தில் செடி உயர வளர்ந்திருக்கும். மக்கிய மாட்டு சாணத்தை உரமாக கொடுக்கலாம்.
வேர் அழுகல் நோய் ஏற்படாமல் இருக்க சூடோமோனாஸ் பயன்படுத்தவும். ஒவ்வொரு முறையும் ஈரம் காய்ந்த பிறகே தொட்டியில் தண்ணீர் ஊற்றவும். விதைத்த 75 நாட்களில் இருந்து மண் கிளறி பார்த்தால் கேரட் வளர்ச்சி தெரியும்.
அப்புறம் என்ன ஊட்டி கேரட்டை வீட்டிலேயே வளர்த்து சமையலுக்கு பயன்படுத்துங்க.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation