herzindagi
image

வீட்டில் கொத்தமல்லி செடி செழித்து வளர்ப்பதற்கான முறை; வியாபாரமே பண்ணலாம்

மாடித் தோட்டத்தில் கொத்தமல்லி செடி வளர்ப்பது எப்படி ? கொத்தமல்லி அறுவடைக்கு எத்தனை நாட்களாகும் ? கொத்தமல்லி விதை கிடைக்க காத்திருப்பு காலம் ? உள்ளிட்ட தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-03-12, 18:32 IST

நாம் சமைக்கும் எல்லா உணவுகளில் நறுமணத்திற்காக இறுதியில் கொத்தமல்லி தூவுவோம். கொத்தமல்லி வெறும் வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறதா ? கொத்தமல்லி தண்ணீர் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிலர் முளைகட்டிய கொத்தமல்லி சாப்பிட்டு பயனடைகின்றனர். ஒவ்வொரு முறையும் மார்க்கெட் செல்லும் போது 5 ரூபாய், 10 ரூபாய்க்கு கொத்தமல்லி கட்டு வாங்குகின்றோம். வீட்டிலேயே கொத்தமல்லி செடி வளர்த்தால் காய்கறி கடைகளில் கொஞ்சம் மல்லி கொடுங்கள் என கேட்டு வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த பதிவில் மாடித் தோட்டத்தில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி என பார்க்கலாம்.

coriander seeds

மாடித் தோட்டத்தில் கொத்தமல்லி

கொத்தமல்லி செடி வளர்ப்பு

  • நர்சரியில் இருந்து நாட்டு மல்லி வாங்கவும். மளிகை கடையில் மல்லி சில சமயங்களில் முளைக்காது.
  • 50 கிராம் மல்லியை ஒரு கவரில் போட்டு சப்பாத்தி கட்டை வைத்து உருட்டி இரண்டாக உடைக்கவும்.
  • இரண்டு மில்லி சூடோமோனாஸை 200 மில்லி தண்ணீரில் கலந்து அதில் உடைத்த மல்லியை போட்டு மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
  • இதன் பிறகு தண்ணீரை வடிகட்டி காட்டன் துணியில் இறுக்கி கட்டி 3-4 நாட்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள்.

கொத்தமல்லி செடிக்கு மண் கலவை

  • மண் தொட்டியில் 1:1:1: என்ற கணக்கில் செம்மண், கோகோ பீட், மண்புழு உரம் சேர்க்கவும். முளைகட்டிய மல்லியை கொஞ்சம் மண் தோண்டி விதைத்து தண்ணீர் ஊற்றவும்.
  • கொத்தமல்லி செடி மீது அதிக வெயில் பட்டால் கருகிவிடும். அதே போல வெயில் காலத்தில் நேரடி மல்லி விதைப்பு முறை உதவாது.
  • மண் கலவையில் நீங்கள் தொழு உரமும் சேர்க்கலாம். ஈரமான மண்ணில் விதைத்த பிறகு சாம்பல் தூவவும்.

மேலும் படிங்க  புதர் போல புதினா இலைகள் துளிர்த்து வளர்வதற்கு இதை மட்டும் பண்ணுங்க

grow coriander at home

கொத்தமல்லி அறுவடை

  • கொத்தமல்லி வளர்வதற்கு 35-40 நாட்கள் ஆகும். பூ வருவதற்கு முன்பாக கொத்தமல்லியை அறுவடை செய்துவிடுங்கள்.
  • காலையிலும், மாலையிலும் கோலம் போடுவதற்கு தண்ணீர் தெளிப்பது போல செடிக்கு தண்ணீர் ஊற்றினால் போதுமானது.
  • மாவுப்பூச்சி, இலைப்பேன் தாக்குதலை தடுக்க மீன் அமிலம் பயன்படுத்துங்கள்.
  • கொத்தமல்லி விதை கிடைப்பதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகலாம். அடுத்த முறை கொத்தமல்லி விதைப்புக்கு இம்முறை கிடைத்த மல்லியை இரண்டு மாத இடைவெளியில் பயன்படுத்தவும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]