இன்றைய காலத்தில் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் இருந்தால் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். யாருக்கு தான் ஸ்வீட் சாப்பிட புடிக்காது சொல்லுங்க? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஸ்வீட் சாப்பிட புடிக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் ஸ்வீட் சாப்பிட நினைத்தால் கூட சற்று யோசிக்க வேண்டும். அந்த வரிசையில் இனி கவலையே இல்லாமல் இந்த ஒரு லட்டுவை வீட்டில் சமைத்து சாப்பிடலாம்.
முதலில் ஒரு கப் ஓட்ஸை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து எண்ணெய் எதுவும் இல்லாமல் இந்த ஒரு கப் ஓட்ஸை சேர்த்து நன்றாக பொன் நிறமாக மாறும் வரை வருத்து எடுக்க வேண்டும். இப்போது இந்த ஓட்ஸை நன்றாக வறுத்து எடுத்த பிறகு நாம் எடுத்து வைத்துள்ள பாதாம் பருப்பையும் அதே கடாயில் சேர்த்து வறுக்க வேண்டும். சிறிது நேரம் நாம் வறுத்து எடுத்த ஓட்ஸ் மற்றும் பாதாம் பருப்பை சூடு ஆற வைக்கவும். இப்போது ஒரு கப் பேரீச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள் கொட்டை நீக்கிய பேரிச்சம்பழத்தை எடுத்துக் கொள்வது மிக்சியில் சேர்த்து அரைக்கும் போது ஈசியாக இருக்கும்.
இதற்குப் பிறகு நாம் வறுத்து வைத்த ஓட்ஸ் பாதாம் மற்றும் இந்த கொட்டை நீக்கிய பேரிச்சம் பழத்தை தனித்தனியாக ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்த பிறகு ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பேரிச்சம் பழத்தை அரைக்கும் போது இது மாவு பதத்தில் வரும். இந்த கலவையை நன்றாக அழுத்தி பிசைய வேண்டும். இது ஒரு சுவையான ஆரோக்கியமான ஸ்வீட் என்பதால் சர்க்கரை எதுவும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு சிலருக்கு அதிக இனிப்பு தேவைப்பட்டால் சிறிதளவு தேன் கலந்து பிசைந்து கொள்ளுங்கள். இப்போது இந்த ஓட்ஸ் பேரிச்சம்பழ கலவையை நன்றாக அழுத்தி பிசைந்து சிறிய உருண்டைகளாக லட்டு போல உருட்ட வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான பேரீச்சம் பல ஓட்ஸ் லட்டு தயார். இதனை ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டு வரலாம்.
மேலும் படிக்க: அவகேடோ வைத்து ஒரு சூப்பர் ஸ்வீட் செய்யலாம் வாங்க, ரெசிபி இதோ!
அந்த வரிசையில் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த ஸ்வீட் வகையை வீட்டில் செய்து சாப்பிடலாம். இதில் உள்ள ஓட்ஸ் நார்ச்சத்து நிறைந்தது மற்றும் பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது நம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். மேலும் உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் கூட இந்த பேரீச்சம் பழ ஓட்ஸ் லட்டுவை தாராளமாக சாப்பிட்டு வரலாம். கூடுதல் சுவைக்கு தேவைப்பட்டால் சிறிதளவு தேன் மற்றும் துருவிய பாதாம் பருப்புகளை வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.
Image credits: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]