எந்த ஒரு இந்திய பண்டிகையும் அதன் பாரம்பரிய இனிப்பு வகைகள் இல்லாமல் நிறைவடையாது. உலகெங்கிலும் உள்ள சில சுவையான இனிப்பு வகைகளில் இந்தியாவில் தான் அதிக இனிப்புகள் உள்ளது. தீபாவளி நெருங்கி விட்ட நிலையில் ஏற்கனவே நம் வீடுகளில் ஸ்வீட்ஸ் மற்றும் பலகாரங்கள் செய்ய துவங்கி இருப்போம். சிலருக்கு ஸ்வீட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்ற பயம் இருக்கும். ஒரு சிலருக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்ற பயம் இருக்கும். அப்படியானால் இந்த லோ கலோரி ஸ்வீட்டை வீட்டில் செய்து பாருங்க. அவகேடோ வைத்து ஒரு சூப்பர் ஸ்வீட் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஒரு கிண்ணத்தில் 1 கப் தயிர் மற்றும் 1/2 கப் அவகேடோ எடுத்து, அது கிரீம் ஆக மாறும் வரை நன்றாக கலக்க வேண்டும். இப்பொது இதில் 3/4 கப் தேன் சேர்க்க வேண்டும். இதனை அடுத்து நீங்கள் விரும்பினால் சில உலர்ந்த பழங்கள் எடுத்து அதில் மீண்டும் கலக்க வேண்டாம். இப்போது ஒரு ஷாட் கிளாஸ் எடுத்து அந்த கிளாஸ் ஓரங்களை தேனில் நனைக்க வேண்டும். இப்போது இதற்கு மேல் பொடியாக நறுக்கிய பாதாம் பருப்புகளை தூவி விடுங்கள்.
இதனை அடுத்து நாம் தயாரித்து வைத்த அவகேடோ கலவையை இந்த ஷாட் கிளாஸில் சேர்த்து அதற்கு மேல் பொடியாக நறுக்கிய உலர் பழங்களை சேர்க்க வேண்டும். பிறகு மற்றொரு லேயர் அவகேடோ சேர்த்து மீண்டும் உலர் பழங்களை தூவி விட வேண்டும். இப்போது இந்த ஷாட் க்ளாஸை சில மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து சில்லாக எடுத்து பரிமாறுங்கள். அவ்வளவுதான் சுவையான அவகாடோ ஸ்ரீகண்ட் தயார்.
மேலும் படிக்க: தீபாவளி ஸ்பெஷல்: சுவையான மகாராஷ்டிரா ஸ்வீட் கார்வாஸ் செய்து பாருங்க, ரெசிபி இதோ!
இந்த அவகேடோவில் மோனோ அண்ட்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இதனால் இந்த அவகேடோவை சாப்பிட்டால் நம் உடலில் உள்ள எல்டிஎல் என்று கூறப்படும் கெட்ட கொழுப்புகள் குறையும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. அதேபோல தேனில் பாலிப்பினால்கள் எனப்படும் பல்வேறு வகையான ரசாயன கூறுகள் உள்ளது. இயற்கையில் தேன் நமது உடலில் உள்ள ட்ரை கிளிசராய்டுகள் எல்.டி.எல் மற்றும் மொத்த கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளது. அந்த வரிசையில் இந்த வருட தீபாவளிக்கு இனிப்பு வகைகளை சாப்பிட யோசிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட இந்த சுவையான அவகேடோ ஸ்ரீகண்ட் ஸ்வீட்டை ருசிக்கலாம்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]