எந்த ஒரு இந்திய பண்டிகையும் அதன் பாரம்பரிய இனிப்பு வகைகள் இல்லாமல் நிறைவடையாது. உலகெங்கிலும் உள்ள சில சுவையான இனிப்பு வகைகளில் இந்தியாவில் தான் அதிக இனிப்புகள் உள்ளது. அப்படிப்பட்ட இனிப்பு வகைகளில் ஒன்று இந்த மகாராஷ்டிரா ஸ்பெஷல் கார்வாஸ். இது ஆந்திர பிரதேசத்தில் ஜூன்னு என்று அழைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் பலரும் இந்தியாவில் உள்ள இனிப்பு வகைகளை ருசித்துப் பார்க்கவே வருவார்கள். தீபாவளி பண்டிகைக்கு எப்போதும் வீட்டில் செய்யும் லட்டு குலாப் ஜாமுன் முறுக்கு செய்வது கூடவே இந்த முறை மகாராஷ்டிரா ஸ்பெஷல் ஸ்வீட் கார்வாஸ் செய்து அசத்துங்கள். அந்த வரிசையில் மகாராஷ்டிரா ஸ்பெஷல் கார்வாஸ் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த ஸ்வீட் பார்ப்பதற்கு பன்னீர் போலவே இருக்கும். இதைத்தான் சீம்பால் ஸ்வீட் என்று கூறுவார்கள். மாடு கன்று குட்டியை ஈன்றெடுத்த பிறகு அந்த மாட்டிலிருந்து கிடைக்கும் முதல் பால் சீம்பால் என்று கூறப்படுகிறது. இந்த சீம்பாலை வைத்து செய்யும் ஸ்வீட் வகை தான் ஆந்திராவில் ஜுன்னு என்றும் மகாராஷ்டிராவில் கார்வாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை, மிளகு, ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு ஒரு பாத்திரத்தில் சீம்பால் மற்றும் பசும்பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த பாலில் நாம் அரைத்து வைத்த சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து இந்த பாலை ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதற்குப் பிறகு இந்த கலவையை ஒரு இட்லி பாத்திரத்தில் ஆவியில் சுமார் 20 நிமிடம் வரை ஒரு சின்ன பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்க வேண்டும். இந்தப் பால் வெந்த பிறகு அதை முழுவதுமாக ஆற வைத்து உங்களுக்கு பிடித்த வடிவில் கட் செய்து பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான சீம்பால் ஸ்வீட் தயார். இதனை உங்களுக்கு பிடித்த வடிவில் கட் செய்த பிறகு முந்திரி பிஸ்தா அல்லது பாதாம் பருப்புகளை பொடி செய்து இந்த ஸ்வீட் மேல் தூவி விட்டால் டேஸ்ட் அருமையாக இருக்கும். இந்த வருட தீபாவளிக்கு இந்த மகாராஷ்டிரா ஸ்பெஷல் ஸ்வீட்டை வீட்டில் செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் இந்த கார்வாஸ் என்று கூறப்படும் ஜுன்னு ஸ்வீட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]