herzindagi
image

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டை வைத்து அல்வா செய்யலாமா? ரெசிபி டிப்ஸ் இங்கே!

பலருக்கும் பிடித்த இனிப்புகளில் முக்கியமானதாக உள்ளது அல்வா. இதுவரை எத்தனையோ அல்வா சாப்பிட்டிருக்கலாம். பிஸ்கட்டை வைத்தும் அல்வா செய்யலாம். இதோ அதற்கான செய்முறை இங்கே.
Editorial
Updated:- 2025-09-25, 23:21 IST

ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு பலகாரங்களில் முக்கியமானது அல்வா. நெல்லை இருட்டு கடை அல்வா, கோதுமை அல்வா, ரவை அல்வா, அசோகா அல்வா, வாழைப்பழ அல்வா, பாதாம் அல்வா என விதவிதமான அல்வா வகைகள் உள்ளது. நிச்சயம் ஒருமுறையாவது இந்த அல்வாக்களை சாப்பிட்டிருப்போம். இந்த வரிசையில் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய பிஸ்கட்டை வைத்து அல்வா செய்வது தற்போது பிரபலமாகியுள்ளது. இதுவரை நீங்கள் சாப்பிட்டதும், சமைத்துப் பார்த்ததும் இல்லையென்றால் இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ்கள் இங்கே.

மேலும் படிக்க: புரோட்டீன் நிறைந்த காலை உணவுகள் என்னென்ன தெரியுமா? சுலபமாக செய்யும் முறை இங்கே!

பிஸ்கட்டை வைத்து செய்யும் ருசியான அல்வா:

குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்கிக் கொடுத்தால் ஒன்று டீ அல்லது பாலில் நனைத்து சாப்பிடுவார்கள். இல்லை அப்படியே சாப்பிடுவார்கள். அதிகமாக பிஸ்கட் சாப்பிடுவதும் உடலுக்குக் கேடு. எனவே நெய், முந்திரி போன்ற ஊட்டச்சத்துள்ள பொருட்களுடன் பிஸ்கட்டையும் சேர்த்து அல்வா செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • பிஸ்கட்- 3 பாக்கெட்டுகள்
  • கோதுமை மாவு - 2 கப்
  • முந்திரி - 10
  • பால் - அரை கப்
  • நெய் - தேவையான அளவு
  • சர்க்கரை - 2 கப்

 மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி; சுலபமான முறையில் செய்யும் முறை இதோ!

  • பிஸ்கட் அல்வா செய்யும் முறை:

  • ருசியான பிஸ்கட் அல்வா செய்வதற்கு முதலில் பிஸ்கட்டை முதலில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும் கோதுமை மாவு சேர்த்து பொன்னிறமாக கிளற வேண்டும்.
  • ஒரு 5 நிமிடங்களுக்குப் பின்னதாக அரைத்து வைத்துள்ள பிஸ்கட்டையும் சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.
  • மாவும், பிஸ்கெட்டும் நன்கு கலந்து பின்னதாக கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

 

  • கொஞ்சம் கட்டியான பதத்திற்கு வந்தவுடன் சிறிதளவு நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
  • சில நிமிடங்களுக்குப் பிறகு முந்திரிப்பருப்பு, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை உடன் சேர்த்து கிளற வேண்டும்.
  • கடாயில் அல்வா ஒட்டாத அளவிற்கு கிளறிக் கொண்டே இருக்கவும். நெய் கொஞ்சம் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டால் போதும். சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த பிஸ்கட் அல்வா ரெடி.

இதுவரை இந்த ரெசிபியை வீட்டில் சமைத்தது இல்லையென்றால், ஒருமுறையாவது மேற்கூறியுள்ள சமையல் குறிப்புகளைப் பின்பற்றி செய்துப் பாருங்கள்.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]