herzindagi
image

உடல் ஆரோக்கியத்திற்கு பூசணிக்காயில் பிரெட்? எளிமையாக வீட்டிலேயே இப்படி செஞ்சு பாருங்க

மைதா மாவு இல்லேங்க. கோதுமை மாவை வைத்து சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த பூசணிக்காய் பிரெட் செய்யலாம் தெரியுமா? இதோ அதற்கான செய்முறை விளக்கம் இங்கே.
Editorial
Updated:- 2025-09-04, 10:23 IST

பிரெட் என்றால் யாருக்கு பிடிக்காது. பலரது வீடுகளில் காலை உணவாக பிரெட் ஜாம், பிரெட் ரோஸ்ட், பிரெட் ஆம்லேட், பிரெட் பட்டர், பிரெட் பீனட் பட்டர் போன்ற உணவுகள் தான் அதிகளவில் இடம் பெற்றிருக்கும். அந்தளவிற்கு இன்றைக்கு மக்கள் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். பெரும்பாலும் சுவையோடு மிருதுவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மைதா மாவைப் பயன்படுத்துவார்கள். இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் கோதுமை மாவைக் கொண்டும் தற்போது பிரெட்டுகள் விற்பனையாகிறது. இருந்தாலும் நீங்கள் சாப்பிடக்கூடிய பிரெட்டுகள் அதீத சுவை மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றால் ஒருமுறையாவது மஞ்சள் பூசணிக்காயைப் பயன்படுத்தி பிரெட் செய்துப் பாருங்கள். இதுவரை செய்தது இல்லையென்றால் அதற்கான செய்முறை இங்கே.

பூசணிக்காய் பிரெட்

தேவையான பொருட்கள்:

  • மஞ்சள் பூசணிக்காய் - 1 கப்
  • கோதுமை மாவு - ஒன்றரை கப்
  • சர்க்கரை - ஒன்றரை கப்
  • எண்ணெய் - ஒன்றரை கப்
  • பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
  • பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
  • வினிகர் - சிறிதளவு
  • பாதாம், முந்திரி, பிஸ்தா - 100 கிராம்

மேலும் படிக்க: 10 நிமிடங்களில் சுவையான சிப்பி காளான் வறுவல் செய்யலாமா? எளிய செய்முறை இங்கே!

 

பூசணிக்காய் பிரெட் செய்முறை:

  • உடலுக்கு ஆற்றல் சேர்க்கும் பூசணிக்காய் பிரெட் செய்வதற்கு முதலில், மஞ்சள் பூசணிக்காயை வேக வைத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுத்ததாக ஒன்றரை கப் அளவிற்கு எடுத்து வைத்துள்ள சர்க்கரையை நன்கு அரைத்து பவுடராக்கிக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள பூசணிக்காய் கலவை, சர்க்கரை மற்றும் ஒன்றரை கப் அளவிற்கு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த கலவையுடன் சலித்து வைத்துள்ள கோதுமை மாவு ஒன்றரை கப், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு கலக்கிக் கொள்ளவும்.

மேலும் படிக்க: சுவையான கிரீமி காளான் சூப் சிம்பிளா இப்படி செய்யுங்க!

  • இதனுடன் பாதாம் முந்திரி, பிஸ்தா போன்றவற்றை உடைத்து சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் சிறிதளவு வினிகர் கலந்துக் கொள்ளவும்.
  • இறுதியாக இந்த கலவையை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி சுமார் ஒன்றரை மணி நேரம் குக்கரில் வைத்து பேக்கிங் செய்து எடுத்தால் போதும். சுவையான மற்றும் ஹெல்த்தியான பூசணிக்காய் பிரெட் ரெடி.

மஞ்சள் பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

உடலுக்கு ஆற்றலை அளிக்கும் வகையில் கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின்ஏ, பொட்டாசியம், வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. செரிமான பிரச்சனை முதல் வயிறு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சரும அழகைப் பராமரிப்பதற்கும் பேருதவியாக உள்ளது.

Image credit - Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]