இயந்திர உலகில் ஒவ்வொருவரும் பல பணி நிமிர்த்தமாக சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இது தவறான செயல்முறை. என்ன தான் நிறைய பணிகள் இருந்தாலும் சரியான நேரத்திற்கு சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருக்க வேண்டும் என்றால் காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது. அந்தளவிற்கு உடலுக்குத் தேவையான அத்துணை ஆற்றல்களையும் தரக்கூடியதாக உள்ளது.
இதற்காக கிடைத்த உணவுகளைச் சாப்பிடுவது தவறான செயல். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை காலை உணவு என்றாலே இட்லி, தோசை தான் பெரும்பாலும் இடம் பெறும். உளுந்து மற்றும் அரிசியைப் பயன்படுத்துவது சிறப்பாக இருந்தாலும், உடலுக்கு மேலும் வலுச்சேர்க்க வேண்டும் என்றால் சிறுதானிய உணவுகளைக் கட்டாயம் உட்கொள்ள வேண்டும். இதோ என்னென்ன உணவுகள்? எப்படியெல்லாம் சமைக்க வேண்டும்? என்பது குறித்த டிப்ஸ்கள் இங்கே.
மேலும் படிக்க: ஆரோக்கியம், சுவை நிறைந்த பாதாம் அல்வா; ஒரு முறை இப்படி செய்துப் பாருங்கள் !
உடல் வலிமையுடன் இருப்பதற்கு காலையில் ஒருவேளையாவது பாசிப்பயறை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்து சாப்பிடலாம். அல்லது பாசிப்பயறை ஊற வைத்து அரைத்துக் கொண்டு தோசையாக ஊற்றி சாப்பிடலாம். பாசிப்பயறு தோசைக்கு அரைக்கும் மாவு புளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்த பின்னர் உடனே தோசையாக ஊற்றலாம். கொஞ்சம் கூடுதல் சுவையைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அரைத்த பாசிப்பயறு மாவுடன் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து உடன் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்ததாக முளைக்கட்டிய பாசிப்பயறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இரவு முழுவதும் ஊற வைத்துக் கொண்டு வெள்ளைத் துணியில் கட்டி முளைக்கட்ட வைத்து உட்கொள்ளலாம். இதில் அதிக அளவில் புரதங்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. கலோரிகள் குறைவாக உள்ளதால் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. முளைக்கட்டிய பாசிப்பயறு வகைகளை அப்படியே சாப்பிட முடியவில்லையென்றாலும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றைச் சேர்த்து சாலட்டாக செய்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க: அதிக நேரம் எடுக்காது; சீக்கிரமாக சுவையான ஆப்பிள் பாயாசம் செய்யலாம்; எளிய சமையல் குறிப்புகள் இதோ!
பாசிப்பயறை பல்வேறு வகைகளில் உணவு முறைகளில் சேர்த்துக் கொள்வது போன்று, வேக வைத்த வேர்க்கடலை வைத்து சாலட்டாக செய்து சாப்பிடலாம். இதை தயார் செய்வதற்கு முதலில், வேக வைத்த கடலைப்பருப்பு, வெங்காயம்,வெள்ளரி, தக்காளி, பீட்ரூட்,மாதுளை, கொத்தமல்லி இலை, சாட் மசாலா, பச்சை மிளகாய் போன்ற பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: சமையலை ரொம்ப ஈஸியாக்கணுமா? இந்த குக்கிங் டிப்ஸ்களைப் பாலோ பண்ணுங்க
பின்னா் ஒரு பெரிய பாத்திரத்தில் வேக வைத்த நிலக்கடலை பருப்பு, நறுக்கிய வெங்காயம், வெள்ளரி, பீட்ரூட், மாதுளை, கொத்தமல்லி இலை , சாட் மசாலா, பச்சை மிளகாய போன்றவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். இதை தினமும் காலையில் சாப்பிட்டு வரும் போது, உடலுக்குத் தேவையான அத்துணை ஆற்றல்களையும் பெற முடியும். அதிக புரோட்டீன் சத்துக்களும் கிடைக்கும்.
Image Credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]