herzindagi
image

சமையலை ரொம்ப ஈஸியாக்கணுமா? இந்த குக்கிங் டிப்ஸ்களைப் பாலோ பண்ணுங்க

நாம் சமைக்கும் உணவுகள் சுவையானதாக மட்டுமல்ல, எந்த கஷ்டமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் சில குக்கிங் டிப்ஸ்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
Editorial
Updated:- 2025-08-24, 16:13 IST

சமையல் என்பது ஒரு கலை. அனைவருக்கும் எளிதில் வந்துவிட்டாது. ஏதோ மூன்று வேளைகளிலும் ஹோட்டல்களில் வாங்காமல் வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும் என்பதற்காக பலர் சமைக்கின்றோம். அவசர அவசரமாக செய்தாலும் மிகவும் ருசியாகவும், சுலபமாகவும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கொஞ்சம் இந்த குக்கிங் டிப்ஸ்களைப் பாலோ பண்ணுங்க. இதோ அவற்றில் சில உங்களுக்காக.

 

  • வெங்காயம் இல்லாத சமையல் நிச்சயம் கிடையாது. வெங்காயத்தை உரிக்க வேண்டும் என்பதற்காகவே சமையலைத் தவிர்ப்பவர்கள் பலர் உண்டு. இனி அந்த கவலை வேண்டும். எப்போது நீங்கள் சமையலுக்காக வெங்காயத்தை உரிக்கிறீர்கள் என்றால், இதை பாதியாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து விட்டு உரிக்கவும். இதனால் கண்களில் எரிச்சல் மற்றும் கண்ணீர் வர வாய்ப்பில்லை.

மேலும் படிக்க: அரிசி மற்றும் பருப்பை ஊற வைத்து ஏன் சமைக்கிறோம் தெரியுமா?

  • சமைக்கும் முன்னதாக 4 முறை அரிசியை நன்கு கழுவிக் கொள்ளவும். வேக வைக்கும் போது 2 சொட்டு தண்ணீர் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளும் போது சாதம் உதிரியாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.
  • சப்பாத்தி மென்மையாக இருக்க வேண்டும் என்றால், கோதுமை மாவு பிசையும் போது அதனுடன் சிறிதளவு பால் மற்றும் வழக்ம் போல் தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். பின்னர் ஒரு அரை மணி நேரத்திற்காகவே அப்படியே வைத்துவிட வேண்டும். பின்னர் சப்பாத்தி அல்லது பரோட்டா செய்யும் போது மென்மையாக இருக்கும்.

 

  • சாதம் அல்லது சப்பாத்திக்கு ஏதாவது குருமா, கிரேவி செய்யும் போது சுவையை அதிகரிக்க முந்திரி, கசகசா போன்றவற்றை அரைத்து சேர்த்தால் போதும். ஹோட்டல் சுவையை மிஞ்சிவிடும்.
  • சாம்பார், புளிக்குழம்பு போன்றவை செய்வதாக இருந்தால் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு கட்டாயம் நறுக்குவோம். அனைத்து காய்கறிகளையும் நறுப்பதற்கு முன்னதாக அவை பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும். இவற்றைத் தடுக்க வேண்டும் என்றால் காய்களை தண்ணீர் அறுத்துப் போடவும்.

 

  • சமைக்கும் உணவில் உப்பு அதிகமாகிவிட்டால், அதை குறைப்பதற்கு உருளைக்கிழங்கு தோலை நீக்கி நறுக்கிப் போடவும். 5 நிமிடங்களுக்கு குழம்பில் சேர்த்து கொதிக்கவிட்டால் போதும் உப்பின் தன்மை குறைந்துவிடும். அல்லது தேங்காய் பால் அரைத்து ஊற்றலாம்.
  • அவரைக்காய், பீன்ஸ், புடலைங்காய் போன்ற பச்சை காய்கறிகள் எது சமைத்தாலும் அதன் நிறம் மாறாமல் இருக்க வேண்டும் என்றால், எப்போது வேக வைத்தாலும் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது காய்கறிகளின் பச்சை நிறத்தை அப்படியே தக்க வைத்துக்கொள்ள உதவக்கூடும்.

மேலும் படிக்க: பேக்கரி ஸ்டைலில் சுவையான வாழைப்பழ கேக்; சிம்பிள் ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக

இதுபோன்ற டிப்ஸ்களைப் பயன்படுத்தி இனி நீங்கள் சமைக்கும் உணவுகளைக் கொஞ்சம் ருசியாக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

Image credit - Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]