புதிய புதிய உணவுகள ருசிப்பதில் நம் எல்லோருக்குமே விருப்பும் உண்டு. டிவி, யூடியூப்-ல் யாராவது புதிதாக சமைத்தால் அல்லது வித்தியாசமான ரெசிபியை குறிப்பிட்டால் அதை ருசிக்க வேண்டும் எனத் தோன்றும். அப்படியாக மே மாதம் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் சிம்ரன் பகிர்ந்து கொடுக்கும் லெவரியா இனிப்பு பலகாரத்தை ருசிக்க வேண்டும் எனத் தோன்றியது. இதை நீயா நானா நிகழ்ச்சியில் சிலோன் பெட்டி கொழுக்கட்டை என ஒருவர் குறிப்பிட்டார். ஆம் இந்த லெவரியா இலங்கையில் பாரம்பரிய உணவாகும். ஏறக்குறைய செய்முறை கொழுக்கட்டை போல் இருக்கும். எனினும் ருசி கொழுக்கட்டையை விட நன்றாக தெரியும். சிம்ரன் பகிரும் லெவரியா எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
லெவரியா செய்ய தேவையானவை
- அரிசி மாவு
- தேங்காய் துருவல்
- வெல்லம்
- நெய்
- ஏலக்காய்
- வெதுவெதுப்பான தண்ணீர்
- உப்பு
மேலும் படிங்ககொரியன் தப்போக்கி ரெசிபி : கே டிராமா பிரியர்களே ரசிச்சு ருசிச்சு சாப்பிடுங்க
லெவரியா செய்முறை
- பேனில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றுங்கள். நெய் உருகியதும் 150 கிராம் பவுடர் வெல்லம் போட்டு பாகு தயாரிக்கவும். இதில் ஒரு தண்ணீர் டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
- வெல்லம் கரைந்து பாகு தயாரானதும் அரை மூடி தேங்காய் துருவல் போடவும். அடுப்பை ஆஃப் செய்துவிட்டு வெல்லம் பாகு தேங்காய் துருவல் கலக்கலாம். இதில் அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்ப்பது சுவையை உயர்த்தி கொடுக்கும்.
- மற்றொரு பாத்திரத்தில் கால் கிலோ அரிசி மாவு எடுத்துக்கொள்ளுங்கள். இதில் கொஞ்சமாக உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய் மற்றும் 200 மில்லி வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றவும்.
- பூரி மாவு பிசைவது போல் பிசையவும். இதில் பூரணம் ஸ்டஃப்பிங் செய்ய வேண்டியிருக்கும். மாவு தயாரானதும் வாழை இலை எடுத்து அதில் நெய் தடவி இடியாப்பம் குழியில் போட்டு முறுக்கு பிழிவது போல் இடியாப்பம் பிழியவும்.
- அதன் மீது வெல்லம் - தேங்காய் பூரணம் வைத்து மூடிவிடவும். இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி அடுக்கு வைத்து வாழை இலையுடன் மடித்து அரிசி மாவு இடியாப்பத்தை மூடிவிடவும்.
- 10-12 நிமிடங்களுக்கு இட்லி போல் வேகவிட்டு எடுத்தால் சுடான லெவரியா ரெடி.
- இதை இலங்கையில் மழைக்காலத்தில் விரும்பு சாப்பிடுவதாக தகவல். நீங்களும் வீட்டில் தயாரித்து லெவரியா ருசி பார்க்கலாம்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation