கொரியன் தப்போக்கி ரெசிபி : கே டிராமா பிரியர்களே ரசிச்சு ருசிச்சு சாப்பிடுங்க

இன்றைய 2K கிட்ஸ் பலரும் பிடிஎஸ் குழு, கே டிராமா தொடர்களின் ரசிகர்களாக உள்ளனர். அளவு கடந்த ரசனையால் கே டிராமா தொடர்களில் சாப்பிடும் உணவுகளை ருசிக்க வேண்டும் எனவும் ஆசைப்படுகின்றனர். கொரியாவின் மிகப் பிரபலமான உணவாக தப்போக்கி திகழ்கிறது. இதை சாப்பிடுவதற்கு கொரியா செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டில் அரிசி மாவு இருந்தால் போதும்.
image

சமூக வலைதளங்களின் தாக்கத்தால் இந்தியாவில் பெரும்பாலான 2K கிட்ஸ் பிடிஎஸ் குழு, கே-டிராமா போன்ற கொரிய பின்னணி பொழுதுபோக்கு விஷயங்களை ஆர்வமுடன் பார்க்கின்றனர். தமிழ் சீரியல், இந்தி மொழிபெயர்ப்பு சீரியல் கடந்து யூடியூப்பிலும், ஓடிடி தளங்களில் கே-டிராமா பார்த்து கொரிய நாட்டவர், கலாச்சாரம் மீது காதல் கொள்கின்றனர். ரொமான்டிக் கே-டிராமா பார்க்கும் 2k கிட்ஸ் அதில் ஹீரோ, ஹீரோயின் சாப்பிடும் உணவுகளை ஆன்லைனில் தேடி பார்க்கின்றனர். அப்படியான பிரபல கொரிய உணவுகளில் ஒன்று தப்போக்கி. இது அரிசி மாவு கொண்டு செய்யக் கூடியது. வீட்டில் உள்ள 2k கிட்ஸின் தொல்லையை சமாளிக்க பெற்றோரும் தப்போக்கி செய்வது எப்படி என தெரிந்து கொள்கின்றனர். தப்போக்கி ரெசிபி இங்கே பகிரப்பட்டுள்ளது.

how to make tteokbokki

தப்போக்கி செய்ய தேவையானவை

  • குளுட்டன் அரிசி மாவு
  • கோசுசங் சாஸ்
  • சர்க்கரை
  • உப்பு
  • தண்ணீர்
  • சோயா சாஸ்
  • பூண்டு
  • ஸ்ப்ரிங் ஆனியன்

தப்போக்கி செய்முறை

  • பாத்திரத்தில் குளுட்டன் அரிசி மாவு அரை கப் எடுத்துக்கொள்ளவும். இதில் கொஞ்சமாக உப்பு சேர்த்து கால் கப் சுடு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசையவும்.
  • மாவு பிசைந்த பிறகு விரல் போல் உருட்டி எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு அது மிதந்து மேலே வரும் வரை காத்திருங்கள். அதன் பிறகு குளிர்ந்த நீரில் மாற்றவும்.
  • இப்படி செய்வதால் தப்போக்கி மென்று சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். அடுத்ததாக சாஸ் தயாரிக்கலாம். கோசுசங் சாஸ் ஆன்லைனில் கிடைக்கும். இது சிவப்பு சில்லி பேஸ்ட் ஆகும்.
  • மூன்று ஸ்பூன் கோசுசங் பேஸ்ட்டில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் சோயா சாஸ் ஊற்றி கொஞ்சமாக பூண்டு போட்டு கலக்கவும்.
  • ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரில் இந்த கலவை போட்டு கொதிக்கவிடுங்கள். இப்போது குளிர்ந்த நீரில் இருக்கும் மாவை வடிகட்டி கொதிக்கும் சாஸில் போடுங்கள். சாஸ் உள்ளே இறங்கி வற்றும் போது அடுப்பை ஆஃப் செய்துவிடவும்.
  • மேலே ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் தூவி விட்டால் கொரியன் தப்போக்கி ரெடி.

மேலும் படிங்ககருவாட்டு மொச்சை குழம்பை இப்படி சமைத்தால் நாவூற சுவை கிடைக்கும்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP