herzindagi
image

கருவாட்டு மொச்சை குழம்பை இப்படி சமைத்தால் நாவூற சுவை கிடைக்கும்

கிராமங்களில் வாரத்திற்கு ஒரு முறையாவது ருசிக்க கூடிய உணவுகளில் கருவாட்டு மொச்சை குழம்பும் ஒன்று. சைவ அசைவ கலப்பில் அட்டகாசமான கருவாட்டு குழம்பை தவிர்த்து வேறொரு உணவை ருசிக்க முடியுமா என்றால் அது சந்தேகமே. கருவாட்டு மொச்சை குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-06-13, 19:09 IST

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றும் வீடுகளில் கருவாட்டு மொச்சை குழம்பும் சேர்த்தே கொடுப்பார்கள். கூழ் குடித்தவுடன் கொஞ்சம் கருவாட்டு மொச்சை குழம்பு தொட்டு முருங்கை கீரையுன் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். கிராமங்களில் கருவாட்டு மொச்சை குழம்பு வழக்கமான உணவாகும். விவசாய நிலத்தில் வியர்வை சிந்தி உழைத்து மதிய வேளை உணவுக்காக காத்திருக்கும் உழவனிடம் சுட சுட சாதத்தில் கருவாட்டு மொச்சை குழம்பு ஊற்றி கொடுத்தால் அந்த முகத்தில் தெரியும் புன்னகைக்கு விலை மதிப்பே கிடையாது. 

karuvaadu mochai kulambu recipe

கருவாட்டு மொச்சை குழம்பு பொருட்கள்

  • வஞ்சரம் கருவாடு
  • மொச்சைக் கொட்டை
  • தக்காளி
  • கத்திரிக்காய்
  • முருங்கைக்காய்
  • நல்லெண்ணெய்
  • குழம்பு மிளகாய் தூள்
  • தனியா தூள்
  • மல்லித் தூள்
  • மஞ்சள் தூள்
  • கடுகு
  • வெந்தயம்
  • கறிவேப்பிலை
  • பூண்டு

மேலும் படிங்க மாங்காய், தயிர் இருந்தால் சூப்பரான அரைச்சு கலக்கி சமைத்து ருசிக்கலாம்

கருவாட்டு மொச்சை குழம்பு செய்முறை 

  • கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கால் டீஸ்பூன் வெந்தயம், ஐந்து பல் பூண்டு தட்டி போடவும்.  
  • அடுத்ததாக கொஞ்சம் கறிவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம் சேர்க்கவும். சின்ன வெங்காயம் வதங்குவதற்கு உப்பு போடவும். இதன் பிறகு இரண்டு தக்காளியை பொடிதாக நறுக்கி கடாயில் சேருங்கள். 
  • தக்காளியின் பச்சை வாசனை போனவுடன் ஒரு பெரிய முருங்கைக்காயை 6-7 துண்டுகளாக நறுக்கி போட்டு கலந்துவிடவும். 
  • இதே போல மூன்று கத்திரிக்காய், வேகவைத்த பச்சை மொச்சை 100 கிராம் போடுங்கள். காய்கறிகளை வேக வைக்க ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றலாம் அல்லது மொச்சை வேக வைத்த தண்ணீரையும் பயன்படுத்தலாம்.
  • உங்களிடம் குழம்பு மிளகாய் தூள் இருந்தால் மூன்று ஸ்பூன் சேர்க்கவும் அல்லது தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், கரம் மசாலா ஒரு ஸ்பூன் போட்டு கலந்துவிடவும்.
  • கொதி வந்தவுடன் எலுமிச்சை சைஸ் புளியை 100 மில்லி தண்ணீரில் கரைத்து ஊற்றவும். இதில் கடைசியாகவே கருவாடு சேர்க்க வேண்டும். கருவாடு போட்ட பிறகு 5-7 நிமிடங்களுக்கு வேகவைத்தால் போதும்.
  • தொடக்கத்திலேயே உப்பு போட்டதால் குழம்பு தயார் ஆனதும் தேவைக்கு ஏற்ப உப்பு போடுங்கள்.  

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]