herzindagi
image

மாங்காய், தயிர் இருந்தால் சூப்பரான அரைச்சு கலக்கி சமைத்து ருசிக்கலாம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் மாங்காய் வைத்து செய்த அரைச்சு கலக்கி வைரலாக பரவி வருகிறது. நிகழ்ச்சியிலும் நடுவர்களின் பாராட்டை பெற்ற மாங்காய் அரைச்சு கலக்கி எப்படி செய்வது என பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-05-30, 19:31 IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வழியாக புது புது ரெசிப்பிக்களை தெரிந்து கொண்டு சமைத்து ருசிப்பதற்கான வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. ஏற்கெனவே உளுந்து சாதம் ரெசிபி பகிரப்பட்ட நிலையில் சென்ற வாரம் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் செய்த அரைச்சு கலக்கி எப்படி செய்வது என பார்ப்போம். அவர் இதை ஒற்றை மாங்காய் வைத்து செய்திருந்தார். மாங்காய் அரைச்சு தயிரில் கலப்பதே அரைச்சு கலக்கி என கேளராவில் சொல்கின்றனர். ஆம்... இது கேரள மாநிலம் பாலக்காடு பகுதி மக்கள் சுவைக்க கூடிய உணவாகவும். மாங்காய் மட்டுமல்ல நெல்லிக்காய் கொண்டும் அரைச்சு கலக்கி செய்கிறார்கள். 5-7 பொருட்களை கொண்டே இந்த மாங்காய் அரைச்சு கலக்கியை செய்திடலாம்.

mango arachu kalakki

மாங்காய் அரைச்சு கலக்கி செய்ய தேவையானவை

  • மாங்காய் 
  • தேங்காய் துருவல்
  • வெல்லம்
  • உப்பு 
  • பச்சை மிளகாய் 
  • வர மிளகாய் 
  • சீரகம்
  • கறிவேப்பிலை

மாங்காய் அரைச்சு கலக்கி செய்முறை 

  • கையடக்க அளவில் பச்சை மாங்காய் எடுத்துக் கொள்ளவும். இதை தோல் நீக்க தேவையில்லை. இரண்டு மூன்று முறை தண்ணீரில் கழுவுங்கள். 
  • அதன் பிறகு மாங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். அதன் பிறகு உங்களுக்கு தேங்காய் துருவல் தேவைப்படும்.
  • கால் மூடி தேங்காயை துருவி எடுத்து கொள்ளவும். மாங்காய் அரைச்சு கலக்கி செய்வதற்கு இதோடு ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு வர மிளகாய், ஐந்து பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை, சிறியளவு வெல்லம் (15-10 கிராம் ) தேவைப்படும்.
  • இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும். இது என்ன தேங்காய் சட்னி செய்வது போல் இருக்கிறதே என நினைக்க வேண்டாம். 
  • இதன் மற்றொரு பெயர் மாங்காய் சட்னி எனவும் சொல்லலாம். மாங்காயை அரைத்த பிறகு அதனுடன் மூன்று டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலக்கவும். 
  • இறுதியாக தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் கடுகு, கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு வர மிளகாயை இரண்டாக உடைத்து வறுக்கவும்.
  • இதை அரைத்து கலக்கிய மாங்காய் தயிர் கலவையில் சேர்த்தால் மாங்காய் அரைச்சு கலக்கி ரெடி.
  • கேரளாவில் மாங்காய் அரைச்சு கலக்கியை சாதத்தில் ஊற்றி அப்பளம் வைத்து சாப்பிடுவார்கள். இதை நீங்களும் வீட்டில் முயற்சித்து ருசி காணலாம்.

மேலும் படிங்க  உளுந்து சாதம் ரெசிபி : இந்த பக்குவத்தில் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]