herzindagi
image

உளுந்து சாதம் ரெசிபி : இந்த பக்குவத்தில் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்ட உளுந்து சாதம் மற்றும் எள்ளு துவையல் எப்படி செய்வது என பார்ப்போம். உளுந்து சாதம், எள்ளு துவையல் இரண்டுமே நம் உடலுக்கு ஆரோக்கியமானது. நிகழ்ச்சியில் சொன்னது போல உளுந்து சாதத்துடன் அப்பளம் பொரித்து சாப்பிடவும்
Editorial
Updated:- 2025-05-12, 07:32 IST

சமையல் நிகழ்ச்சியில் டிவியில் காண்பதம் நோக்கம் புதிதாக ஒரு உணவை ருசிக்கும் வாய்ப்பை பெறுவதற்கே. முந்தைய குக் வித் கோமாளி சீசன்களில் கவனித்தக்க வகையில் சமைக்கப்பட்ட பல உணவுகளை ஹெர் ஜிந்தகியில் பகிர்ந்துள்ளோம். இந்த சீசனுக்கும் அது மாதிரியான உணவு ரெசிபிகள் பகிரப்படும். ஆறாவது சீசனின் முதல் போட்டியில் இயக்குநரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் கொள்ளு சாதம், எள்ளு துவையல் செய்து சமைத்து இரண்டாமிடம் பெற்றார். எலுமிச்சை, தக்காளி, தேங்காய், புளி சாதம் வரிசையிலான கலவை சாதங்களில் இதை கேள்விப்பட்டதில்லை என தோன்றியது. திருநெல்வேலி வட்டாரத்தில் உளுந்து சாதம் ஸ்பெஷலானது எனக் கூறுகின்றனர். உளுந்து சாதமும், எள் துவையலும் அற்புதமான காம்போ என்று நடுவரும் குறிப்பிட்டார். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம்.

black urad dal rice

உளுந்து சாதம் செய்ய தேவையானவை

  • கருப்பு உளுந்தம் பருப்பு
  • தேங்காய்
  • வர மிளகாய்
  • பூண்டு
  • வெந்தயம்
  • உப்பு 
  • நல்லெண்ணெய்

உளுந்து சாதம் செய்முறை 

  • முக்கால் கப் உடைத்த கருப்பு உளுந்தம் பருப்பு எடுத்துக் கொள்ளுங்கள். கடாயில் போட்டு மிதமான தீயில் வாசனை வெளிவரும் வரை வறுக்கவும்.
  • கொஞ்சமாக சிவந்தால் போதும். வறுப்பதை நிறுத்திவிடுங்கள். அதே பேனில் கால் டீஸ்பூன் வெந்தயம் போட்டு வறுக்கவும்.
  • கருப்பு உளுந்து, வெந்தயம், ஒரு கப் சாப்பாட்டு அரிசி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்ணீரில் 2-3 முறை நன்கு கழுவவும். 
  • குக்கரில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் வரை காத்திருக்கும். இப்போது அரிசியை வடிகட்டி போட்டு குக்கரை மூடாமல் வேகவிடுங்கள்.
  • இப்போது தேவையான அளவு உப்பு, முக்கால் கப் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
  • சாதம் பாதியளவு வெந்ததும் குக்கரை மூடி ஒரு விசில் அல்லது 5 நிமிடம் வரை காத்திருக்கவும். 
  • உளுந்து சாதம் நன்றாக வெந்து தயாராகி இருக்கும். மேலே ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுங்கள். இதனுடன் சாப்பிட எள் துவையலும் செய்யலாம்.

எள்ளு துவையல் செய்முறை

  • பேனில் ஒன்றரை ஸ்பூன் கருப்பு எள்ளு போட்டு வறுக்கவும். எள்ளு வறுத்தவுடன் சிறிது நேரம் ஆறவிடுங்கள்.  
  • மிக்ஸியில் அரைப்பதற்கு வறுத்த எள்ளு, எட்டு வர மிளகாய், ஒரு பல் பூண்டு, நெல்லிக்காய் சைஸ் புளி, கால் டீஸ்பூன் உப்பு, கால் கப் துருவிய தேங்காய், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும். எள்ளு துவையல் ரெடி.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]