ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான முட்டை பூண்டு மசாலா! டேஸ்டே தனி...

50 கிராம் எடை கொண்ட முட்டையை வைத்து விதவிதமான சுவையில் பல உணவுகள் தயாரிக்கலாம். புரதச் சத்து தேவைக்கு தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான முட்டை பூண்டு மசாலா செய்முறையை பார்க்கலாம்.
image

முட்டையை வைத்து செய்யக்கூடிய அனைத்து ரெசிபிகளுமே மிகவும் எளிதானது. காய்ச்சல் பாதிப்புக்கு பிறகு உடல்நலம் தேறி இயல்பு நிலை திரும்பும் போது சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். இதற்கு ஆந்திரா ஸ்டைல் முட்டை பூண்டு மசாலா உதவும். முட்டை மற்றும் பூண்டு உடலுக்கு எண்ணற்ற நன்னைகளை வழங்ககூடியவை. இந்த உணவு ஆந்திராவில் முட்டை வெள்ளுள்ளி காரம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளுள்ளி என்றால் பூண்டு என அர்த்தம். காய்ச்சலில் இருந்து மீண்டு குணமடையும் போது நம் வாய் காரசாரமான உணவுகளை விரும்பும். அப்போது இந்த முட்டை பூண்டு மசாலா செய்து சாப்பிடுங்கள். ருசி வேற லெவலில் இருக்கும். ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் இது மிகப்பிரபலம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

egg garlic masala

முட்டை பூண்டு மசாலா செய்யத் தேவையானவை

  • முட்டை
  • பூண்டு
  • சீரகம்
  • நல்லெண்ணெய்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • பெரிய வெங்காயம்
  • கடுகு
  • உப்பு
  • கொத்தமல்லி

முட்டை பூண்டு மசாலா செய்முறை

  • குடும்பத்தில் ஐந்து நபர்களுக்கு தலா இரண்டு முட்டை என கணக்கிட்டு 10 முட்டையை தண்ணீரில் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து மிதமான தீயில் 8-10 நிமிடங்களுக்கு அவித்திடுங்கள்.
  • 25 பல் பூண்டு உரித்து அம்மியில் போட்டு அரைக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும்நான்கு டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு இடித்து அரைக்கவும்.
  • அடுத்ததாக கால் டீஸ்பூன் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். பூண்டு பயன்பாட்டில் தயக்கம் காட்டாதீர்கள். பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. இதை அப்படியே வைக்கவும்.
  • கடாயில் ஆறு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அரை டீஸ்பூன் கடுகு போடுங்கள். கடுகு வெடித்தவுடன் ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் தேவையான அளவு கறிவேப்பில்லை போட்டு வறுக்கவும்.
  • இதன்பிறகு மூன்று பெரிய சைஸ் வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கடாயில் சேர்க்கவும். கொஞ்சம் உப்பு போட்டு வதக்குங்கள்.
  • வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அம்மியில் அரைத்த பூண்டு மசாலா மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்யவும்.
  • இரண்டு நிமிடங்கள் வதக்கிய பிறகு வேக வைத்த முட்டைகளின் தோல் உரித்து கடாயில் போட்டு பூண்டு மசாலாவுடன் நன்கு கலக்கவும்.
  • 100 விநாடிகள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள். விரும்பினால் கொத்தமல்லி சேர்க்கலாம்.
  • இதை அப்படியே வெள்ளை சாதத்தில் பிரட்டி சாப்பிடுங்கள். முட்டை பூண்டு மசாலாவின் சுவையில் மெய்மறந்து விடுவீர்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP