மொறுமொறுப்பான வெண்டைக்காய் குர்குரே செய்முறை! குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்...

குழந்தைகளுக்கு பிடித்த வகையில் வெண்டைக்காய் கொடுத்தால் ஏன் அதை தவிர்க்க போகிறார்கள். இந்த வெண்டைக்காய் குர்ரேவை வீட்டில் ட்ரை பண்ணுங்க...
image

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுத்து ஆரோக்கியமாக வளர்க்க நினைத்தாலும் அவர்கள் சுவை காரணமாக எது உடலுக்கு நல்லதோ அதை விரும்புவதில்லை. அப்படியாக உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்ககூடிய வெண்டைக்காய் தவிர்க்கப்படுகிறது. வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் குழம்பு ஆகியவற்றை தவிர்க்கும் குழந்தைகள் ஏராளமானோர் இருக்கின்றனர். இவர்களுக்கு பிடித்த வகையில் வெண்டைக்காய் குர்குரே செய்து கொடுத்தால் மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் உள்ளதென்று விரும்பி சாப்பிடுவார்கள். இது இந்தியில் பிந்தி குர்குரே, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வெண்டைக்காய் ரோஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. வாருங்களுக்கு இதன் செய்முறையை பார்ப்போம்...

lady finger

பிந்தி குர்குரே / வெண்டைக்காய் ரோஸ்ட் செய்யத் தேவையானவை

  • வெண்டைக்காய்
  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • உலர் மாங்காய் பொடி
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • கடலெண்ணெய்
  • மஞ்சள் தூள்
  • சீரகத் தூள்
  • மல்லித் தூள்
  • சாட் மசாலா
  • கடலெண்ணெய்

வெண்டைக்காய் குர்குரே செய்முறை

  • அரை கிலோ வெண்டைக்காயை தண்ணீரில் நன்கு கழுவி அரை மணி நேரம் வெயிலில் காய விடவும்.
  • தண்ணீர் நன்கு உறிஞ்சிய பிறகு வெண்டைக்காயில் உள்ள விதைகளை எடுத்து கேரட் நீட்டமாக வெட்டுவது போல் வெட்டவும். ஒரு சொட்டு தண்ணீர் அல்லது ஈரத்தன்மை இருந்தால் கூட மொறுமொறுப்பு கிடைக்காது; ரோஸ்ட் போலவும் இருக்காது.
  • இதனுடன் தலா ஒரு கப் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து மிக்ஸ் செய்யவும். அடுத்ததாக உலர் மாங்காய் பொடி ஒரு ஸ்பூன், சாட் மசாலா ஒரு ஸ்பூன் சேருங்கள்.
  • சாட் மசாலா இல்லையென்றால் கரம் மசாலா பயன்படுத்துங்கள். அதுவே போதுமானது.
  • இப்போது கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் சீரகத் தூள், ஒரு டீஸ்பூன் மல்லித் தூள் சேருங்கள்.
  • இறுதியாக தேவையான அளவு உப்பு போட்டு அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். மசாலாப் பொருட்கள் வெண்டைக்காயில் ஊறட்டும்.
  • இதனிடையே கடாயில் கடலெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடாகி விட்டதா என ஒரு வெண்டைக்காய் போட்டு பார்க்கவும்.
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து வெண்டைக்காயை உதிரி உதிரியாக எண்ணெய்-ல் போடுங்கள்.
  • மிதமான சூட்டில் 3-4 நிமிடங்களில் வெண்டைக்காய் குர்குரே தயாராகிவிடும். ஆரம்பத்தில் நீக்கிய விதைகளை எண்ணெய்-ல் பொரித்து சாப்பிடலாம்.
  • இதை நீங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரத்து ஸ்நாக் அல்லது மதிய வேளையில் குச்சி சிப்ஸ் போல கலவை சாதங்களுடன் கொடுக்கலாம். இம்முறை வெண்டைக்காயை தவிர்க்காமல் கட்டாயம் சாப்பிடுவார்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP