Ragda Patties Recipe : மும்பை ஸ்ட்ரீட் ஸ்டைல் ரகதா பாட்டிஸ் செய்முறை

வட மாநிலங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் பிரதானமாக இடம்பெறும் மும்பை ஸ்ட்ரீட் ஸ்டைல் ரகதா பாட்டிஸ் செய்முறை இங்கே 

ragda patties ingredients

தமிழகத்தில் கிடைக்கும் பெரும்பாலான வடநாட்டு தின்பண்டங்களான பேல் பூரி, பாணி பூரி, வட பாவ், தாஹி பூரியை தவிர்த்து புதிதாக ஒன்றை சுவைக்க வேண்டும் என ஆசையா ? வீட்டிலேயே ஒரு மணி நேரத்தில் தயாரிக்க கூடிய ரகதா பாட்டிஸ் பற்றி பார்க்கப் போகிறோம். இது மும்பையின் மிகப் பிரபலமான மாலை நேரத்து ஸ்நாக் ஆகும். டெல்லி, மும்பை உள்ளிட்ட மாநகரங்களில் ரகதா பாட்டிஸ் எளிதாகக் கிடைக்கும்.

mumbai style ragda pattice

ரகதா பாட்டிஸ் செய்யத் தேவையானவை

  • வெள்ளை பட்டாணி
  • தண்ணீர்
  • மஞ்சள் தூள்
  • உருளைக்கிழங்கு
  • ஜீரா தூள்
  • கரம் மசாலா
  • பச்சை மிளகாய்
  • சோள மாவு
  • உப்பு
  • கொத்தமல்லி
  • நெய்
  • சீரகம்
  • வெங்காயம்
  • இஞ்சி
  • சாட் மசாலா

கவனம் கொள்க

ஒரு டம்ளர் அளவிற்கு பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் குக்கரில் நான்கு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சள் சேர்த்து ஐந்து விசில் அடிக்கும் வரை பட்டாணியை வேக வைக்கவும்.

இதேபோல எட்டு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை வேக வைத்து விடுங்கள். ஏறக்குறைய சுண்டல் சமோசா சென்னாவின் செய்முறைக்கும் இதற்கும் ஒற்றுமைகள் உள்ளன.

ரகதா பாட்டிஸ் செய்முறை

  • முதலில் மூன்று உருளைக்கிழங்கு, கொஞ்சம் ஜீரா தூள், கரம் மசாலா, இரண்டு பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சோள மாவு சேர்த்து மிக்ஸ் செய்யவும்
  • இதனுடன் உப்பு, ஒரு கொத்து கொத்தமல்லி சேர்க்கவும். பாட்டிஸ் என்பது கட்லெட் போலவே.
  • அடுத்ததாகக் கடாயில் மூன்று ஸ்பூன் கெட்டி நெய் ஊற்றி அது சூடான பிறகு ஒரு டீஸ்பூன் சீரகம், இரண்டு மீடியம் சைஸ் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டுப் பொறிக்கவும்
  • அதன் பிறகு தலா ஒரு ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, மிளகாய், தனியா மற்றும் அரைஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் கரம் மசாலா சேர்க்கவும்.
  • தொடர்ந்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் ஒரு கொதி வந்த பிறகு இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை நறுக்கி போடவும்
  • மசாலா பொருட்கள் மற்றும் தக்காளியின் பச்சை வாடை போக கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • இதன் பிறகு இரண்டு வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளை பட்டாணியை சேர்க்கவும்.
  • இதனுடன் ரகதாவிற்கு தேவையான அளவு உப்பு போடவும்
  • இறுதியாக ஒரு ஸ்பூன் சாட் மசாலா மற்றும் கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு கடாயை அடுப்பிலிருந்து எடுத்துவிடுங்கள்.
  • அடுத்ததாக கட்லெட்டை நெய்யில் பொறிக்க வேண்டும். இதற்குப் பாட்டிஸ் மிக்ஸை உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வொரு உருண்டையின் அளவும் 30 கிராம் முதல் 40 கிராம் வரை இருக்கலாம். உடையாதபடி உருண்டை பிடித்து தட்டையாக்கி விடவும்.
  • தற்போது கடாயில் 150 கிராம் நெய் ஊற்றி அது சூடான பிறகு தட்டையாக்கிய பாட்டிஸ் உருண்டையை நெய்யில் போட்டு வறுத்தெடுக்கவும்.

இதன் மீது ரகதா, புதினா சட்னி, மீத்தா சட்னி ஊற்றிக் கொஞ்சம் வெங்காயம் சேர்த்து ஓம்பொடி மற்றும் கொத்தமல்லி தூவினால் சுவையான ரகதா பாட்டிஸ் ரெடி.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP