சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லும் வழியில் மத்தூர் என்ற ஊர் வரும். நீங்கள் இரயிலில் பயணித்தாலும் அல்லது காரில் பயணித்தாலும் நிச்சயம் மத்தூர் வரும். சுமார் 50 - 60 ஆண்டுகளுக்கு முன்பாக அங்குள்ள பிரபலமான உணவகத்தில் இரயில் பயணிகளுக்காக சூடான சுவையான உணவைத் தயாரிக்க முடிவு செய்திருக்கின்றனர்.
இரயில் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகவே அங்கு நிற்கும் என்பதால் கொடுக்கும் உணவு சூடாகவும் இருக்க வேண்டும் அதேநேரம் விற்று தீர்ந்து விட வேண்டும் என சிந்தித்து வடை செய்து வழங்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் கர்நாடகா முழுவதும் மத்தூர் வடை மிகவும் பிரபலமானது.
தமிழகத்தில் எப்படி மெது வடை பிரபலமோ அதேபோல கர்நாடகாவில் மத்தூர் வடை மிகவும் பிரபலம். சட்னி இல்லாமல் சாப்பிட்டாலும் இந்த வடை சுவையானதாக இருக்கும். மத்தூர் வடை பார்ப்பதற்கு தட்டையாகத் தெரியும். இது ஒரு மாலை நேரத்து தின்பண்டமாகும்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இந்த வடையை செய்து கொடுக்கலாம். குறைந்த தீயில் இந்த வடையை நாம் வறுப்பதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு வடையில் சூடு அப்படியே இருக்கும். இந்த வடை செய்யும் போது பயன்படுத்தும் பொருட்களின் அளவீட்டில் கவனம் செலுத்துங்கள், இல்லையெனில் வடையை தட்டையாக உருட்ட முடியாது.
மேலும் படிங்க Bisibelebath Recipe: வீட்டிலேயே எளிதாக பிஸிபேளாபாத் செய்யலாம்
மத்தூர் வடை செய்யத் தேவையானவை
- ரவை
- அரிசி மாவு
- மைதா
- கொத்தமல்லி
- வெங்காயம்
- வெள்ளை எள்
- இஞ்சி
- பச்சை மிளகாய்
- தண்ணீர்
- மிளகாய் தூள்
- உப்பு
- வேர்க்கடலை பவுடர்
- கறிவேப்பிலை
- பெருங்காயத் தூள்
மத்தூர் வடை செய்முறை
- பெரிய பாத்திரத்தைப் பயன்படுத்தவும். ஒரு பெரிய பாத்திரத்தில் 50 கிராம் அளவிற்கு ரவை, 100 கிராம் அரிசி மாவு, 50 கிராம் மைதா, ஆறு ஸ்பூன் அளவிற்கு நறுக்கிய கொத்தமல்லி, பத்து ஸ்பூன் அளவிற்கு பொடிதாக நறுக்கிய வெங்காயம் போடுங்கள்
- அதனுடன் அரை ஸ்பூன் வெள்ளை எள், மூன்று ஸ்பூன் அளவிற்கு பொடிதாக நறுக்கிய இஞ்சி, ஐந்து ஸ்பூன் அளவிற்கு நறுக்கிய பச்சை மிளகாய், நிறத்திற்காக கால் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்கவும்
- அடுத்ததாக வடை மாவுக்கு தேவையான அளவு உப்பு, மிக்ஸியில் வேர்க்கடலையை அரைத்து அதிலிருந்து ஐந்து ஸ்பூன் வேர்க்கடலை பவுடர், கொஞ்சம் கறிவேப்பிலை, அரை ஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்க்கவும்
- இவை அனைத்தையும் மிக்ஸ் செய்து தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றவும். சப்பாத்தி மாவுக்கு தண்ணீர் ஊற்றி பிசைவது போலத் தான் இந்த மாவையும் தயாரிக்க வேண்டும்.
- நன்றாக பிசைந்த பிறகு 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். நாம் வாழை இலையில் மாவை தட்டையாக்கி கடாயில் போட்டு வறுக்கப் போகிறோம். எனவே வாழை இலையில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து வைத்துவிடுங்கள்.
- எவ்வளவு தட்டையாக உருட்ட முடியுமோ அந்த அளவிற்கு தட்டையாக உருட்டுங்கள். ஒரு வடைக்கு 40 கிராம் மாவு பயன்படுத்தவும். அதாவது ஒரு மினி சைஸ் பூரியை நினைவில் கொள்ளுங்கள்.
- கடாயில் அரை லிட்டர் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு வடை மாவை உள்ளே செலுத்தவும். குறைந்த தீயில் வடையை வறுக்க வேண்டும். ஏழு நிமிடங்களுக்கு ஒரு வடையை வறுக்கவும். அப்போது தான் மத்தூர் வடை மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும்.
மேலும் படிங்க Vada Pav Recipe : மும்பை ஸ்டைல் வட பாவ் செய்முறை
நாம் பயன்படுத்திய அளவுகளை வைத்து சுமார் பத்து வடைகள் தயாரிக்கலாம். மத்தூர் வடையை சாப்பிட்ட பிறகு அதன் ருசியை உங்களால் விவரிக்க இயலாது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation